சென்னையில் ஜவான் FDFS பார்க்க கோலிவுட் படையோடு கிளம்பி வந்த அட்லீ - வைரலாகும் போட்டோஸ்
Jawan FDFS : ஜவான் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், இயக்குனர் அட்லீ சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் அப்படத்தை கண்டுகளித்தார்.
jawan FDFS
தமிழ் சினிமாவில் ராஜா ராணி படம் மூலம் அறிமுகமாகி, பின்னர் தெறி, மெர்சல், பிகில் என விஜய்யை வைத்து வரிசையாக மூன்று மாஸ் ஹிட் படங்களை கொடுத்தவர் அட்லீ. இதையடுத்து பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ, அங்கு முதல் படமே ஷாருக்கானை வைத்து இயக்கி உள்ளார். ஜவான் என்கிற அத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது.
jawan Team
ஜவான் படத்திற்கு இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் இப்படத்திற்கு அதிகளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கு காரணம் இது இந்தி படமாக இருந்தாலும், இதில் பணியாற்றியுள்ள பெரும்பாலானவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான். இதனால் ஜவான் படத்தை நேரடி தமிழ் படமாகவே ரசிகர்கள் கருதுகின்றனர்.
இதையும் படியுங்கள்... Jawan Review in Tamil : கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கினாரா அட்லீ? ஷாருக்கானின் ஜவான் பட விமர்சனம் இதோ
Atlee with his wife Priya
ஜவான் படம் மற்ற மாநிலங்களில் அதிகாலையே ரிலீஸ் ஆகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் தமிழ் நாட்டில் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படாததால், இன்று காலை 9 மணிக்கு தான் ஜவான் படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. FDFS பார்க்க வந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், ஆடிப்பாடியும் தடபுடலாக கொண்டாடினர்.
jawan cast and Crew
இயக்குனர் அட்லீ ஜவான் படத்தின் முதல் காட்சியை சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் கண்டுகளித்தார். இதற்காக ஜவான் என்கிற ஸ்பெஷல் டீ-ஷர்ட்டையும் அணிந்து வந்த அட்லீக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அட்லீ உடன் அவரது மனைவி பிரியா, இசையமைப்பாளர் அனிருத், பாடலாசிரியர் விவேக் ஆகியோரும் ஜவான் படத்தை கண்டுகளித்தனர். அதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... சேல்ஸ்மேன் முதல் தேசிய விருது பெற்ற நடிகர் வரை.. விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?