- Home
- Gallery
- ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு... அக்கா, தங்கைகளுக்கு மத்தியில் அழகனாக ஜொலிக்கும் அருண் விஜய்
ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு... அக்கா, தங்கைகளுக்கு மத்தியில் அழகனாக ஜொலிக்கும் அருண் விஜய்
நடிகர் அருண் விஜய் தன்னுடைய தங்கைகள் ப்ரீத்தா, ஸ்ரீதேவி மற்றும் அக்கா அனிதா ஆகியோருடன் எடுத்த பழைய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Arun vijay, anitha vijayakumar
கோலிவுட்டுக்கு அதிக ஹீரோயின்களை கொடுத்த குடும்பம் என்றால் அது நடிகர் விஜயகுமாரின் குடும்பம் என்றே சொல்லலாம். இவரின் மனைவி மஞ்சுளா, மகள்கள் ப்ரீத்தா, வனிதா, ஸ்ரீதேவி தொடங்கி தற்போது வனிதா மகள் ஜோவிகா வரை அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது. மறுபுறம் விஜயகுமாரின் மகன் அருண் விஜய்யும் கோலிவுட்டில் முன்னணி மாஸ் நடிகராக கலக்கி வருகிறார்.
anitha vijayakumar
விஜயகுமாரின் குடும்பத்தில் இருந்து சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்த ஒரே ஒருவர் என்றால் அது அவரின் மகள் அனிதா விஜயகுமார் தான். இவருக்கும் பாரதிராஜாவின் கருத்தம்மா படத்தில் டாக்டர் வேடத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தது. ஆனால் படிப்பில் பிசியானதால் நடிப்பு நோ சொல்லிவிட்டார் அனிதா.
இதையும் படியுங்கள்... லாஜிக் இடிக்குதே.. 106 வயசுல இந்தியன் தாத்தாவால் எப்படி சண்ட போட முடியும்? சர்ச்சைக்கு ஷங்கர் கொடுத்த விளக்கம்
anitha vijayakumar Family
அனிதா விஜயகுமார் டாக்டருக்கு படித்துள்ளார். அவர் படிக்கும்போதே தன்னுடன் படித்த கோகுல் என்பவரை காதலித்தார். பின்னர் அவருடனே அனிதாவுக்கு திருமணமும் ஆனது. இந்த ஜோடிக்கு தியா என்கிற மகளும், ஸ்ரீஜெய் என்கிற மகனும் உள்ளனர்.
anitha vijayakumar old photos
அனிதா விஜயகுமாருக்கு தற்போது வயது 50ஐ கடந்துவிட்டது. இவரது மகள் தியாவுக்கு அண்மையில் தான் திருமணமும் நடந்து முடிந்தது. இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் அனிதா அதில் அவ்வப்போது புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் அருண் விஜய்யுடன் எடுத்த பழைய புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார்.
Arun Vijay With his sisters
ஒவ்வொரு முறை வீட்டுக்கு வரும்போதும் பழைய ஆல்பங்களை எடுத்து அந்த சமயத்தில் நடந்த அழகான நினைவுகளை பற்றி பேசுவோம் என்றும் அப்படி குடும்ப திருமண விழாவின் போது நடிகர் அருண் விஜய் மற்றும் தங்கைகள் ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோருடன் எடுத்த புகைப்படங்களையும் அனிதா பகிந்துள்ளார்.
இதையும் படியுங்கள்... Kalki 2898AD Review : கலக்கியதா? காலை வாரியதா? பிரபாஸின் ‘கல்கி 2898AD’ திரைப்படம் - விமர்சனம் இதோ