Asianet News TamilAsianet News Tamil

Kalki 2898AD Review : கலக்கியதா? காலை வாரியதா? பிரபாஸின் ‘கல்கி 2898AD’ திரைப்படம் - விமர்சனம் இதோ

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி உள்ள கல்கி 2898AD திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

Prabhas kamalhaasan and amitabh bachchan starrer kalki 2898AD movie review gan
Author
First Published Jun 27, 2024, 7:44 AM IST

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் கல்கி. இப்படத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ள இப்படத்தில், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பேண்டஸி திரைப்படமான இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். பாகுபலிக்கு நிகராக பிரபாஸ் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் படம் இதுவாகும்.

கல்கி 2898AD திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக தயாராகி உள்ளது. இப்படத்தில் நானி, விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதை விரிவாக பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... சித்தார்த்தை வைத்து ரஜினியை பங்கமா கலாய்த்த இந்தியன் 2! கமல் கூட நோட் பண்ணலயா!

Prabhas kamalhaasan and amitabh bachchan starrer kalki 2898AD movie review gan

கல்கி 2898AD ஓகே-வாக உள்ளது. அமிதாப் பச்சன் மாஸ் காட்டி இருக்கிறார். பிரபாஸுக்கு கேமியோ கதாபாத்திரம் மட்டுமே. புஜ்ஜி கதாபாத்திரம் நகைச்சுவையாக உள்ளது. கமலின் நடிப்பு மற்றும் சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை நன்றாக உள்ளது. முதல்பாதி ஆவரேஜாகவும், இரண்டாம் பாதி அதைவிட நன்றாகவும் உள்ளது. ஆனால் நீளம் அதிகம். இண்டர்வெல் காட்சி சூப்பர். கிளைமாக்ஸ் மற்றும் இரண்டாம் பாகத்துக்கான லீடு வேறலெவல், எமோஷனல் கனெக்ட் சுத்தமாக இல்லை. படத்தின் ஐடியா மற்றும் பிரம்மாண்ட மேக்கிங்கிற்காக ஒரு முறை பார்க்கலாம். என பதிவிட்டுள்ளார்.

கல்கி 2898AD படம் அருமையாக எழுதப்பட்டு உள்ளது. பிரபாஸ், கமல், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே என அனைவரின் நடிப்பும் அருமை. கிளைமாக்ஸ் காட்சி புல்லரிக்க வைக்கிறது. பின்னணி இசை நன்றாக உள்ளது. நாக் அஸ்வினுக்கு தலைவணங்குகிறேன். மேக்கிங் சூப்பர் என குறிப்பிட்டு 5க்கு 4 ஸ்டார்கள் கொடுத்திருக்கிறார்.

கல்கி 2898AD படத்தின் இரண்டாம் பாதியில் நிறைய மாஸ் காட்சிகள் உள்ளன. திரைக்கதையும் அருமையாக உள்ளது. இதன் இரண்டாம் பாதிக்காகவே படத்தை மறுபடியும் பார்க்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார்.

கல்கி 2898AD படத்தில் பிரபாஸின் நடிப்பு வெறித்தனமாக உள்ளது. சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் தெறிக்கவிட்டுள்ளார். சொல்லப்போனால் அவர் தான் இப்படத்தின் இரண்டாவது ஹீரோ, விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான் மற்றும் ராஜமவுலி ஆகியோரின் கேமியோ வேறலெவல் என பாராட்டி இருக்கிறார்.

கல்கி 2898AD பிரபாஸின் திரைப்படம் இல்லை அமிதாப் பச்சனின் படம். பிரபாஸை விட அமிதாப்புக்கே படத்தில் அதிகப்படியான காட்சிகள் இருக்கின்றன என குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படியுங்கள்... KPY Bala: இக்கட்டான நிலையில் வெங்கல் ராவ்... சிம்புவுக்குப் பிறகு கேபிஒய் பாலா செய்த பெரிய உதவி!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios