மக்களே மறந்திருந்த ரஜினியின் வசனத்தை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்து மறைமுகமாக கலாய்த்திருப்பது ரஜினி ரசிகர்களை அப்செட் ஆக்கி இருக்கிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தில் அவரது நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினியை பங்கமாக கலாய்ப்பது போல வசனம் ஒன்று இடம்பெற்றிருக்கிறது. நேரடியாக கிண்டல் செய்யாவிட்டாலும் மறைமுகமாக அவரைக் குறிப்பது போல ஒரு வசனத்தை வைத்திருக்கிறார்கள்.

நடிகர் கமலஹாசனின் இந்தியன் 2 படத்தின் ட்ரைலர் செவ்வாய்க்கிழமை வெளியானது. முதல் பாகத்தை போல இதிலும் ஊழல் எதிர்ப்பை அடிப்படையாக வைத்தே படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். இந்தப் படத்தில் சித்தார்த் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ட்ரெயலரிலேயே சித்தார்த் படத்தில் ஏற்றுள்ள கேரக்டரின் பலம் தெரியவந்துள்ளது. அதில் அவர் பேசியிருக்கும் ஒரு வெயிட்டான வசனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால், ரஜினி ரசிகர்கள் அந்த வசனத்தால் கடுப்பாகி இருக்கிறார்கள். ரஜினி பேசியதை ஒரு வார்த்தையை கிண்டலாக பயன்படுத்தி இருப்பது தான் அதற்குக் காரணம்.

கார் கதவைத் திறந்துவிட்ட அஜித்... இப்படி செய்வார்னு எதிர்பார்க்கவே இல்ல... நெகிழ்ச்சியில் நடராஜன்!

ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிக்கொண்டே பல வருடங்களாக டிமிக்கி கொடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது, ஒருநாள் நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்று குற்றம்சாட்டிப் பேசினார். அது ட்ரெண்டாகி ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என அவரது ரசிகர்களை நம்ப வைத்தது.

ஆனால், தேர்தலுக்கு முன் ரஜினி தனது நிலைப்பாட்டில் திடீரென குட்டிக்கரணம் அடித்து அனைவரையும் ஏமாற்றினார். கொரோனா காலம்.. உடல்நிலை சரியில்லை என்று சாக்குப் போக்குகளைக் கண்டுபிடித்து அரசியலுக்கு வரப்போவதில்லை என்று முழுக்கு போட்டார்.

இப்போது இந்தியன் 2 படத்தில் சித்தார்த் பேசிய வசனம் ரஜினி பேசியதை நினைவூட்டிவிட்டது. ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே, "இங்க சிஸ்டம் சரியில்லைன்னு வாய் கிழிய பேசுவோம், ஆனா அதை சரிசெய்ய ஒரு துளிகூட கிள்ளி போட மாட்டோம்" என்று சித்தார்த் உணர்ச்சி கொப்பளிக்க டையலாக் பேசுகிறார்.

மக்களே மறந்திருந்த ரஜினியின் வசனத்தை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்து மறைமுகமாக கலாய்த்திருப்பது ரஜினி ரசிகர்களை அப்செட் ஆக்கி இருக்கிறது. ரஜினியின் நெருங்கிய நண்பரான கமல் கூட இதை கவனிக்காமல், அனுமதித்து விட்டார் என்றும் தலைவரின் ரசிகர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

மெகாஸ்டார் சிரஞ்சீவி அரசியல் ரீ-என்ட்ரி...? பவன் கல்யானின் ஜனசேனாவில் முக்கிய பதவிக்கு ரெடியா?