மெகாஸ்டார் சிரஞ்சீவி அரசியல் ரீ-என்ட்ரி...? பவன் கல்யானின் ஜனசேனாவில் முக்கிய பதவிக்கு ரெடியா?
அரசியல் வாழ்க்கையை நிறுத்திய சிரஞ்சீவி தற்போது மீண்டும் அரசியலுக்கு வரப்போவதாகச் சொல்லப்படுகிறது. இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மெகாஸ்டார் சிரஞ்சீவி மீண்டும் அரசியல் பிரவேசம் செய்யப் போகிறாரா? அரசியலுக்கு வர இதுவே நல்ல நேரம் என்று நினைக்கிறீர்களா? அவர் ரீ-என்ட்ரி கொடுத்தால் எந்த கட்சிக்கு போவது பொருத்தமாக இருக்கும்?
சினிமாவில் நுழைய விரும்பும் பலருக்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஆதர்சமாக திகழ்ந்து வருகிறார். அவரது குடும்பத்தில் இருந்து பலர் திரையுலகில் ஜொலித்துள்ளனர். கடந்த காலங்களில் சிரஞ்சீவி அரசியலில் இறங்கியது அனைவருக்கும் தெரிந்ததே. பிரஜா ராஜ்ஜியம் கட்சியைத் தொடங்கி ஒரு அலையை உருவாக்கிவிட்டு யு டர்ன் அடித்துவிட்டார்.
ஆனால் மெகாஸ்டார் அரசியலில் ரீ-என்ட்ரி கொடுக்கப் போகிறார் என்ற பலமான பேச்சு அடிபடுகிறது. சிரஞ்சீவி மீண்டும் அரசியலுக்கு வந்து நல்ல பதவியை பிடிப்பார் என அவரது ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர். 2008ஆம் ஆண்டு பிரஜா ராஜ்ஜியம் கட்சியை உருவாக்கிய பின்னர், 2009ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டார்.
அந்தத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் இனி கட்சியை நடத்துவது சாத்தியமில்லை என்பதை உணர்ந்த சிரஞ்சீவி கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
அதையடுத்து கைதி நம்பர் 150 படத்தின் மூலம் மெகாஸ்டார் சினிமாவில் தீவிரமாக இயங்க ஆரம்பித்தார். அதோடு அரசியல் வாழ்க்கையை நிறுத்திய சிரஞ்சீவி தற்போது மீண்டும் அரசியலுக்கு வரப்போவதாகச் சொல்லப்படுகிறது. இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆனால், மெகாஸ்டாருடன் மோடிக்கு நல்லுறவு உள்ளது என்பதால் அவர் ஏதேனும் ஒரு மாநிலத்துக்கு ஆளுநராக அனுப்பப்பட வாய்ப்பு உள்ளது என்றும் சொல்கிறார்கள். ஆனால் அப்படி நடப்பதற்கு அறிகுறியே இல்லை என்றும் கூறுகின்றனர். ஒருவேளை சிரஞ்சீவி மீண்டும் காங்கிரஸுடன் இணைவாரா? அல்லது சகோதரர் பவன் கல்யாணின் ஜனசேனாவில் சேர்ந்துவிடுவாரா? இந்தக் கேள்விகளுக்கு காலம்தான் பதில் சொல்லும்.