- Home
- Gallery
- லாஜிக் இடிக்குதே.. 106 வயசுல இந்தியன் தாத்தாவால் எப்படி சண்ட போட முடியும்? சர்ச்சைக்கு ஷங்கர் கொடுத்த விளக்கம்
லாஜிக் இடிக்குதே.. 106 வயசுல இந்தியன் தாத்தாவால் எப்படி சண்ட போட முடியும்? சர்ச்சைக்கு ஷங்கர் கொடுத்த விளக்கம்
இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனின் சேனாபதி கேரக்டருக்கு வயது 106 ஆக இருப்பதால் அவர் பறந்து பறந்து சண்டையிடுவது எப்படி என்பது குறித்து ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

Kamalhaasan, Shankar
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படம் இந்தியன். கடந்த 1996-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தில் ஊழல் செய்பவர்களை பந்தாடும் சேனாபதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கமல்ஹாசன். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். அந்த காலகட்டத்திலேயே பான் இந்தியா அளவில் இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்திற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு தேசிய விருதும் கிடைத்தது.
Indian 2 Movie
இந்தியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை தற்போது 28 ஆண்டுகளுக்கு பின்னர் எடுத்துள்ளனர். இப்படத்திலும் நடிகர் கமல்ஹாசன் சேனாபதியாக நடித்திருக்க, அவருடன் சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
Indian 2 Kamal
இந்தியன் முதல் பாகத்தை காட்டிலும் இப்படத்தில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளாராம் கமல்ஹாசன். இந்தியன் முதல் பாகத்தில் நடிக்க 30 நாட்கள் மட்டுமே பிராஸ்தெடிக் மேக்கப் போட்டிருந்த கமல், இந்தியன் 2 படத்திற்காக சுமார் 70 நாட்கள் அந்த மேக்கப்பில் நடித்தாராம். அந்த மேக்கப்பை போடவே சுமார் 3 மணிநேரம் ஆகுமாம். பின்னர் ஷூட்டிங் முடிந்து அதை கலைக்க மறுபடி ஒரு மணிநேரம் ஆகுமாம். இந்த வயதிலும் கமலின் அர்ப்பணிப்பை பார்த்து சிலாகித்துப்போனதாக ஷங்கரே பல பேட்டிகளில் கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... Kalki 2898AD Review : கலக்கியதா? காலை வாரியதா? பிரபாஸின் ‘கல்கி 2898AD’ திரைப்படம் - விமர்சனம் இதோ
Indian 2 Kamal age
இதனிடையே இந்தியன் 2 படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியானது. அந்த ட்ரைலர் பார்க்க மாஸாக இருந்தாலும் அதில் இடம்பெற்றுள்ள கமலின் சேனாபதி கதாபாத்திரம் முதல் பாகத்தில் இருந்தது போல் இல்லை என்கிற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இப்படத்தில் சேனாபதி கேரக்டர், தற்போதைய அரசியல் சூழலில் நடக்கும் ஊழல்களை தட்டிக்கேட்கும்படி அமைத்துள்ளதாக கூறப்படுவதால் அதில் லாஜிக் மிஸ்டேக் உள்ளதாக நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
Indian 2 Kamal age controversy
ஏனெனில் இந்தியன் முதல் பாகத்திலேயே சேனாபதி பிறந்த ஆண்டாக 1918-ஐ குறிப்பிட்டு இருந்தனர். அப்படி பார்த்தால் இந்தியன் 2 படத்தில் அவருக்கு வயது 106. பின்னர் எப்படி இந்த வயதில் அவர் பறந்து பறந்து சண்டையிடுகிறார் என்கிற கேள்வி, இயக்குனர் ஷங்கரிடமே முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் கொடுத்த விளக்கம் தான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
Director Shankar
அப்படி அவர் என்ன சொன்னார் தெரியுமா, சீனாவில் தற்காப்பு கலையில் சிறந்த மாஸ்டரான லீ சிங் யுவான் என்பவர 120 வயதிலும் பறந்து பறந்து சண்டை போடுவார். அவரைப்போலவே சேனாபதியும் வர்மக்கலையில் கைதேர்ந்தவர். சிய ஒழுக்கத்துடன் சரியான உணவு, யோகா, தியானம் போன்றவற்றை அனைவரும் கடைபிடித்தால் வயது ஒரு மேட்டரே இல்ல என கூறி ஆச்சர்யப்படுத்தி உள்ளார் ஷங்கர்.
இதையும் படியுங்கள்... சித்தார்த்தை வைத்து ரஜினியை பங்கமா கலாய்த்த இந்தியன் 2! கமல் கூட நோட் பண்ணலயா!