- Home
- Gallery
- பாட்டி ஆன பின்னும் பியூட்டி குறையல... நதியா போல் வயதாக வயதாக அழகில் மெருகேறிக்கொண்டே போகும் கவிதா விஜயகுமார்
பாட்டி ஆன பின்னும் பியூட்டி குறையல... நதியா போல் வயதாக வயதாக அழகில் மெருகேறிக்கொண்டே போகும் கவிதா விஜயகுமார்
அருண் விஜய்யின் சகோதரியும், நடிகர் விஜயகுமாரின் மகளுமான கவிதாவின் யங் லுக் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijayakumar Family
கோலிவுட்டின் பிக்பாஸ் பேமிலி என்றால் அது நடிகர் விஜயகுமாரின் பேமிலி தான். அவருக்கு மொத்தம் ஐந்து மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் கவிதா, அனிதா மற்றும் அருண் விஜய் ஆகியோர் விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணுக்கு பிறந்தவர்கள். வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் இரண்டாவது மனைவி மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள்.
Vijayakumar family photo
விஜயகுமாரின் குடும்பத்தில் அவரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார் தவிர்த்து மற்ற ஐந்து பிள்ளைகளும் சினிமாவில் நடித்துவிட்டனர். அனிதாவுக்கு பாரதிராஜா இயக்கிய கருத்தம்மா படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தது. ஆனால் அவர் படிப்பில் கவனம் செலுத்தியதால் நடிப்புக்கு நோ சொல்லிவிட்டார்.
arun vijay with his sisters
மற்றபடி விஜயகுமாரின் மூத்த மகள் கவிதா, பெரியளவில் நடிக்காவிட்டாலும், ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்திருக்கிறார். அது என்ன படம் தெரியுமா?... கடந்த 1995-ம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் வெளிவந்த கூலி திரைப்படத்தில் மட்டும் கவிதா விஜயகுமார் நடித்திருக்கிறார். அதன்பின்னர் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.
இதையும் படியுங்கள்... அனிதா விஜயகுமார் திருமணத்தில் முறை மாமனாக சீர்செய்த சத்யராஜ்! கணவரோடு வந்த ஸ்ரீதேவி! வெட்டிங் போட்டோஸ்!
Vijayakumar daughters
இதுதவிர விஜயகுமாரின் எஞ்சிய மூன்று மகள்களான வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் பிசியான ஹீரோயினாக வலம் வந்தாலும் திருமணத்துக்கு பின்னர் நடிப்புக்குக்கு முழுக்கு போட்டு விட்டனர். இவர்கள் மூவரில் வனிதா மட்டும் அப்பா உடன் ஏற்பட்ட சண்டையால் அவரைப் பிரிந்து வாழ்ந்து வருவதோடு தற்போது சினிமாவிலும் நடிக்கிறார்.
Kavitha and anitha vijayakumar
மறுபுறம் விஜயகுமார் பேமிலியை பார்க்கும் போது இவர்கள் குடும்பத்தில் மட்டும் யாருக்குமே வயசே ஆகாதா என்று தான் கேட்க தோன்றும். அவரின் மகள்கள் கவிதா, அனிதா ஆகியோருக்கு வயது 50ஐ கடந்துவிட்டாலும் இன்னும் இளமை குறையாமல் இருக்கின்றனர். இவர்கள் இருவரின் மகள்களுக்கும் திருமணமே ஆகிவிட்டது.
Kavitha Vijayakumar with her daughter and Grand Daughter
அதிலும் கவிதா விஜயகுமாரின் மகளுக்கு திருமணமாகி அவருக்கே இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், சமீபத்தில் தன்னுடைய மகள் மற்றும் அம்மா உடன் கவிதா விஜயகுமாரின் மகள் ஹாசினி எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது. அதில் பேத்தி கயல் அருகே சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளார் கவிதா. இதைப்பார்த்த பலரும் உங்கள் பேத்திக்கு அக்கா மாதிரி இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மகளா இது? அழகில் சினிமா நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ஜஸ்வதியின் க்யூட் போட்டோஸ்