இந்த ட்விஸ்டை எதிர்பார்களையே? எதிர்நீச்சல் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபலம்.. காத்திருக்கும் சம்பவம்!
எதிர்நீச்சல் சீரியல், தற்போது தர்ஷினியின் திருமணத்தை கதைக்களமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் நிலையில், அதிரடியாக பிரபலம் ஒருவர் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. ஆணாதிக்கம் கொண்ட ஒரு மனிதர்... தான் நினைத்தது நடக்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லை அளவு செல்கிறார் என்பதையும், அவருக்கு எதிராக அவருடைய குடும்பமே தற்போது திரும்பி உள்ளத்தையும் கதைக்களமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் குணசேகரன் என்கிற ஆணாதிக்கவாதியாக முதலில் நடிகர் மாரிமுத்து நடித்து வந்த நிலையில், அவரின் மறைவுக்கு பின்னர் இந்த சீரியலில் அவருடைய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வேல ராமமூர்த்தி. இவரை துணிச்சலாக எதிர்த்து நிற்கும் ஜனனி கதாபாத்திரத்தில் மதுமிதா நடித்து வருகிறார். மேலும் முக்கிய வேடத்தில், பிரியதர்ஷினி, கனிகா, ஹரிப்ரியா, சத்ய பிரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
முதலில் சொத்து பிரச்சனை பற்றிய கதைக்களத்தில் ஒளிபரப்பான இந்த சீரியல், பின்னர் ட்ராக் மாறி... தர்ஷினியின் கடத்தலில் துவங்கி தற்போது தர்ஷினி திருமணத்தில் வந்து நிற்கிறது. எப்படியும் மைனரான தன்னுடைய பெண்ணுக்கு உமையாளின் மகளோடு திருமணத்தை நடத்தியே தீருவேன் என குணசேகரன் கங்கணம் கட்டிக்கொண்டு திரிய... அவருக்கு எதிராக ஒட்டுமொத்த குடும்பமே செயல்படுகிறது.
இதுவரை ஜனனி - குணசேகரன் இடையே நடந்த பல பிரச்சனைகளில் குணசேகரன் வெற்றி பெற்ற நிலையில் இம்முறை அவர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த நிலையில் தான் மிக முக்கிய கேரக்டர் ஒருவர் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுநாள் வரை அப்பாத்தா இறந்து விட்டதாக சென்ற கதைக்களத்தில் ட்விஸ்ட் வைப்பது போல்...அப்பத்தா ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளாராம். இதனை உறுதி படுத்துவது போல், நடிகை கனிகா பாம்பே ஞானத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.