- Home
- Gallery
- ஒர்க் அவுட் ஆகும் செளந்தரபாண்டியின் பிளான்... ஆபத்தில் சண்முகம்; காப்பாற்றுவாரா பரணி? - அண்ணா சீரியல் அப்டேட்
ஒர்க் அவுட் ஆகும் செளந்தரபாண்டியின் பிளான்... ஆபத்தில் சண்முகம்; காப்பாற்றுவாரா பரணி? - அண்ணா சீரியல் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி மற்றும் சௌந்தரபாண்டி என இருவரும் சண்முகத்தை தீர்த்து கட்ட பிளான் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna Serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி மற்றும் சௌந்தரபாண்டி என இருவரும் சண்முகத்தை தீர்த்து கட்ட ஆளுக்கு ஒரு பிளான் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது சௌந்தரபாண்டி சனியனிடம் மலையாளம் தெரிஞ்ச ஒரு போலீசை ஏற்பாடு பண்ணு, உங்க அம்மா சூடாமணிக்கு உடம்பு சரியில்லன்னு சொல்லி சண்முகத்தை கூட்டிட்டு போய் ஊரை தாண்டினதும் முத்துப்பாண்டி ஏற்பாடு பண்ணி இருக்க ரௌடிகள் அவனை போட்டு தள்ளிடுவாங்க என்று திட்டத்தை சொல்கிறார்.
Zee Tamil Anna Serial
இவர்கள் பேசியதை தூரமாக நின்று பார்க்கும் இசக்கியும் பாக்கியமும் என்ன பேசுகிறார்கள் என தெரியாமல் சண்முகத்திற்கு எதிராக ஏதோ பிளான் போடுகிறார்கள் என்பதை மட்டும் புரிந்து கொண்டு பரணிக்கு போன் போட்டு சண்முகத்தை உஷாரா இருக்க சொல்லு என்று சொல்கின்றனர். ஏற்கனவே பயத்தில் இருக்கும் பரணி அம்மா சொன்னதை நினைத்து இரவெல்லாம் தூங்காமல் சண்முகத்தையே பார்த்தபடி இருக்க தூக்கத்திலிருந்து எழுந்த அவன் பயத்தில் இருக்கும் பரணியை வெளியே கூட்டிச் சென்று நிலாவை காட்டி ஆறுதலாக பேசிக் கொண்டிருக்க பரணி சண்முகத்தை நெருங்கி வரும் நேரத்தில் வைகுண்டம் தூக்கத்தில் இருந்து எழுந்து விடுகிறார்.
இதையும் படியுங்கள்... Appukutty : தான் படித்த பள்ளிக்கு 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தாராள மனசுடன் அள்ளி கொடுத்த அப்புக்குட்டி
Anna Serial Update
பிறகு இவர்களை போய் தூங்குங்க என்று அனுப்பி வைத்து விடுகிறார். மறுநாள் காலையில் சண்முகம் பரணியை கிளினிக் அழைத்து வர முத்துப்பாண்டி இவர்களை பின்தொடர்ந்து வருகிறான். சண்முகம் பரணியை கிளினிக்கில் விட்டுவிட்டு கிளம்பும்போது காலில் அடி பட, பரணி ஏதோ தப்பா தோணுது என்று பயப்பட, சண்முகம் அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று கிளம்பி வருகிறான்.
Anna serial Today Episode
இந்த நேரத்தில் சனியன் ஏற்பாடு பண்ண போலீஸ் லேடி சண்முகத்தை சந்தித்து உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்ல என்று ஸ்டேஷனுக்கு அழைத்துச் சொல்கிறாள். இதைப் பார்த்த முத்துப்பாண்டி ரவுடிகளுக்கு தகவல் கொடுக்க, பரணி சண்முகம் எதற்கு இவங்க கூட போகணும் என சந்தேகப்பட்டு அவளும் ஆட்டோவில் பின் தொடர்கிறாள். சண்முகம் திருவனந்தபுரம் பஸ்ஸில் ஏற, பரணி கனவில் வந்த பஸ் இதுதான் என அறிந்து அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... 30 பிளாப் படங்களை கொடுத்த பிரபல டாப் ஹீரோவின் தம்பி.. ஆனா அவரின் சொத்து மதிப்பு ரூ.500 கோடி..