Anikha: தவறாக தொடுவாங்க... டார்ச்சர் பண்ணுவாங்க! நான் அம்மா கூடவே தான் இருப்பேன்! போல்டாக பேசிய அனிகா!
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ள அனிகா சுரேந்திரன், சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சினைகள் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
கேரள மாநிலம் மஞ்சேரி என்கிற பகுதியைச் சேர்ந்தவர் அனிகா சுரேந்திரன். தன்னுடைய 3 வயதிலேயே மோகன்லால் நடித்த சூப்பர் ஹிட் படமான 'சோட்டா பொம்மா' என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அனிகா. அதன் பின்னர் பல முன்னணி நடிகர்களுக்கு மகளாக மலையாள படங்களில் நடித்த இவருடைய எதார்த்தமான நடிப்பை பார்த்த இயக்குனர் கௌதம் மேனன் தல அஜித்தை வைத்து இயக்கிய 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் அஜித்தின் மகளாக இவரை தமிழில் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த திரைப்படம், அனிகா சுரேந்தரனுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்ததோடு, அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது.
அந்த வகையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'நானும் ரவுடி தான்', படத்தில் நயன்தாராவின் சிறிய வயது கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் ஜெயம் ரவியின் தங்கையாக மிருதன்', படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தினார். பின்னர் விசுவாசம், மாமனிதன், போன்ற படங்களிலும் நடித்திருந்தார் அனிகா சுரேந்திரன்.
anikha surendran
தென்னிந்திய திரையுலகை கலக்கி வரும் குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்ட அனிகா, 18 வயதை எட்டிய பின்னர் ஹீரோயின் வாய்ப்பு தேட துவங்கினார். அந்த நேரத்தில் தான் தெலுங்கில் 'புட்ட போக்குமா' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, மலையாளத்தில் 'ஓ மை டார்லிங்' என்கிற படத்தில் நடித்தார். லிப் லாக் காட்சி முதற்கொண்டு எல்லை கடந்த நடிப்பார் முகம் சுழிக்கவைத்த அனிகா, ஒரு சில விமர்சனங்களுக்கும் ஆளானார்.
செம்ம கியூட்...கமல், விஜய், அஜித் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்ட டாப் ஹீரோயினா இவங்க?
தற்போது நடிகர் தனுஷ் தனுஷின் 50-ஆவது படத்தில் நடித்து முடித்துள்ளார். அது மட்டும் இன்றி, தனுஷ் தன்னுடைய அக்காவின் மகனை ஹீரோவாக வைத்து இயக்கி உள்ள 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.
அனிதா சுரேந்திரன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிடி சார் திரைப்படம் 24ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்ட அனிகா சுரேந்திரன், இதுபோன்ற ஒரு போல்டான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்க என்ன காரணம் என்று கூறியுள்ளார்.
ரூ.3000 கோடிக்கு அதிபதியாக இருக்கும் நடிகருடன் டேட்டிங் செய்யும்... மணிரத்னம் பட ஹீரோயினா இது?
பேருந்துகளில் பெண்களை தவறாக தொடுவார்கள், டார்ச்சர் செய்வார்கள் என கேள்வி பட்டுள்ளேன். எனக்கு அது போல் நடந்தது கிடையாது நான் எப்போதுமே என் அம்மாவுடன் மட்டுமே இருப்பேன். இதுபற்றிய ஒரு விழிப்புணர்வு வர வேண்டும் என்பதாலேயே இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.