MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பெத்த அம்மா இந்த அளவுக்கு வெறுக்கும் படி என்ன செய்தார் பிக்பாஸ் தனலட்சுமி? லீகல் நோட்டீஸால் பரபரப்பு!

பெத்த அம்மா இந்த அளவுக்கு வெறுக்கும் படி என்ன செய்தார் பிக்பாஸ் தனலட்சுமி? லீகல் நோட்டீஸால் பரபரப்பு!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய தனலட்சுமிக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவரின் தாயார் லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

2 Min read
manimegalai a
Published : Jun 01 2024, 12:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய தனலட்சுமிக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவரின் தாயார் லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

27

பிக்பாஸ் ஜூலி வரிசையில், அதிக விமர்சனங்களுக்கு ஆளானவர் தனலட்சுமி. இவர் சீரியல், திரைப்படங்கள் போன்றவற்றில் நடிக்க வில்லை என்றாலும்... சமூக வலைத்தளத்தில் தன்னுடைய கெட்டப்பை மாற்றிக்கொண்டு, ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமானவர். 

Vani Bhojan Photos: சிம்பிள் சல்வாரில் கூட... சும்மா கும்முனு இருக்கும் சின்னத்திரை நயன் வாணி போஜன்!
 

37

எனவே பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதியாகவே தனலட்சுமி கலந்து கொண்டு விளையாடினார். இவர் பிக்பாஸ் நிகழ்சியில் தன்னுடைய அப்பா ஒர்க் ஷாப் வைத்திருப்பவர், அம்மா துணி வியாபாரம் செய்பவர், நான் ஒரு வேலை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டவள் என பேசியபோது, இவரின் நண்பர்கள் பலர் அவர் கூறுவது அத்தனையும் பொய் என பேட்டி கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தினர்.

47

மேக்கப் போடவே தெரியாது என கூறிய இவரின், பிரைடல் போட்டோ ஷூட் போன்றவற்றை வெளியிட்டு... நெட்டிசன்களும் பொய்யை கூட, பொருந்தும் படி கூறவேண்டும் என விமர்சனம் செய்தனர். 

கொப்பன் மவனே வாடா..! அன்று சிம்புவுடன் சென்ற இடத்துக்கு... 12 வருடம் கழித்து நயன்தாராவை கூட்டி சென்ற விக்கி!

57

தனலட்சுமி சொல்வதெல்லாம் பொய் என பல தகவல்கள் பரவிய போது, அவரை நியாய படுத்தும் விதத்தில்... பல பேட்டிகள் மற்றும் வீடியோ வெளியிட்டு முட்டி கொடுத்து வந்தவர் அவரின் அம்மா தான். தன்னுடைய மகளை எந்த விதத்திலும் விட்டுக்கொடுக்காமல் தாய் பாசத்தை வெளிப்படுத்திய அவரே தற்போது தனக்கும், மகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

67

 இந்த தகவலை தனலட்சுமியே தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். "இனிமேல் தனக்கும் தன்னுடைய அம்மாவுக்கும், எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் அம்மாவின் பெயரை நான் எங்கேயும் பயன்படுத்தக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் தனலட்சுமி கூறியுள்ளார். ஆனால் தாய் - மகள் இருவருக்கு இடையே இப்படி ஒரு விரிசல் வர என்ன காரணம் என்பதை அவர் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்துக்கு நோ சொன்னாரா நயன்தாரா? ஸ்ரீ லீலாவையும் டீலில் விட்டுவிட்டு.. தல-க்கு புது ஜோடியை டிக் அடித்த ஆதிக்

77

பிக்பாஸ் வீட்டுக்குள் 77 நாட்கள் இருந்த தனலட்சுமி, உள்ளே இருக்கும் போது... அசீமை விமர்சித்து விக்ரமனுக்கு ஆதரவாக பேசிய நிலையில், அசீம் தான் வெற்றியாளர் என தெரிந்ததும் பச்சோந்தி போல் அவர் பக்கம் சாய்ந்தது மட்டும் இன்றி அண்ணன்... அண்ணன்... அசீமுடன் சேர்ந்து பல பேட்டிகளும் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved