MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • விஜய் டிவி 'குக் வித் கோமாளி' பிரபலத்தை காதலிக்கிறாரா அம்மு அபிராமி! புகைப்படத்துடன் போட்ட கேப்ஷனை பாருங்க!

விஜய் டிவி 'குக் வித் கோமாளி' பிரபலத்தை காதலிக்கிறாரா அம்மு அபிராமி! புகைப்படத்துடன் போட்ட கேப்ஷனை பாருங்க!

நடிகை அம்மு அபிராமி குக் வித் கோமாளி பிரபலத்தை காதலித்து வருகிறாரா? என்கிற சந்தேகத்தை எழுப்பி  பிரபலம் புகைப்பதோடு வெளியிட்ட கேப்ஷன். அப்படி என்ன தான் சொல்லி இருக்காரு என்பதை பார்க்கலாம் வாங்க. 

2 Min read
Author : manimegalai a
Published : Mar 28 2024, 06:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான, 'பைரவா' திரைப்படத்தில் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவியாக, ஒரு சிறு ரோலில் நடித்தவர் அம்மு அபிராமி. இதைத் தொடர்ந்து, 'என் ஆளுடைய செருப்பை காணோம்', படத்தில் கதாநாயகி சந்தியாவின் தோழியாக நடித்திருந்தார். 

26

பின்னர் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில், கார்த்தியின் தங்கையாக இவர் நடித்த கதாபாத்திரம் அம்மு அபிராமியை கவனிக்க வைத்தது. இதை தொடர்ந்து, 'ராட்சசன்' படத்தில்  பள்ளி மாணவியாக நடித்திருந்தார். மேலும் 'அசுரன்' படத்தில், தனுஷின் முன்னாள் காதலியாக நடித்த இவரது கதாபாத்திரம் அம்மு அபிராமிக்கு திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

Siddharth and Aditi Rao Engaged: அதிதி ராவுடன் திருமணம் நடக்கவில்லை! நிச்சயதார்த்தத்தை உறுதி செய்த சித்தார்த்!

36

தற்போது தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும், படு பிஸியாக நடித்து வரும் அம்மு அபிராமி சில படங்களில் கதாநாயகியாக நடித்தாலும், பல படங்களில் கதைக்கும், கதாபாத்திரத்திற்கும், முக்கியத்துவம் கொடுக்கும் அழுத்தமான கேரக்டரை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் எட்டு படங்கள் ரிலீஸுக்கு தயாராகி உள்ளன.

46

இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு, குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு செகண்ட் ரன்னரப்பாக மாறினார். இந்நிலையில் அம்மு அபிராமி 'குக் வித் கோமாளி' சீசன் 1ல் இருந்து நான்கு சீசன் வரை இயக்குனராக இருந்த பார்த்தீவ் மணியை காதலித்து வருவதாக, சமூக வலைதளத்தில் பரவி வரும் தகவல் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.

Rakshan Salary: 'குக் வித் கோமாளி' ஒவ்வொரு சீசனிலும் உயரும்.. ரக்சனின் சம்பளம்! வெளியான லேட்டஸ்ட் தகவல்!

56

அதாவது மார்ச் 16ஆம் தேதி நடிகை அம்மு அபிராமி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார் அப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனரான பார்த்தீவ் மணி அபிராமியுடன் எடுத்த ஸ்டைலிஷ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, குணா படத்தில் இடம்பெற்ற 'அபிராமி அபிராமி' என்ற பாடலுடன் மிகவும் உருக்கமான வரிகளால் வாழ்த்து கூறியுள்ளார்.

66

அதாவது "உன்னைப் போன்ற இனிமையான ஆன்மாவுக்காக, புன்னகை நிறைந்த முகங்கள் பலர் ஒன்று கூடி உன்னை வாழ்த்துகிறார்கள். ஹாப்பி பர்த்டே அபிராமி. எப்போதும் சந்தோஷமாக இரு என தெரிவித்திருந்தார்". இதற்கு அபிராமியும் எல்லாவற்றிக்கும் தேங்க்யூ என்று பதில் கொடுத்துள்ளார். இந்த பதிவு கொஞ்சம் சந்தேகத்தை தூண்டும் விதத்தில் இருந்தாலும், இந்த பதிவுக்கு, நடிகை ரித்திகா இவர்கள் இருவரையும் கலாய்ப்பது போல் ஆம் என இமோஜி போட்டுள்ளார். அதே போல்  சிவாங்கி, குரேஷி ஆகியோரும் மாறி மாறி கலாய்த்துள்ளதால்... நெட்டிசன்களும் இவர்கள் இருவருக்கு இடையே ஒருவேளை ஏதாவது இருக்குமோ எனதங்களின் சந்தேகத்தை தெரிவித்து வருகிறார்கள்.

Vivek Daughter Wedding: மறைந்த நடிகர் விவேக் வீட்டில்.. மிகவும் எளிமையாக நடந்த அவரது மகள் தேஜஸ்வினி திருமணம்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved