MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Vivek Daughter Wedding: மறைந்த நடிகர் விவேக் வீட்டில்.. மிகவும் எளிமையாக நடந்த அவரது மகள் தேஜஸ்வினி திருமணம்!

Vivek Daughter Wedding: மறைந்த நடிகர் விவேக் வீட்டில்.. மிகவும் எளிமையாக நடந்த அவரது மகள் தேஜஸ்வினி திருமணம்!

மறைந்த நடிகர், விவேக் மகளுக்கு நேற்று மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்த நிலையில், தற்போது இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில்... வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

2 Min read
manimegalai a
Published : Mar 28 2024, 12:19 PM IST| Updated : Apr 01 2024, 08:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தமிழ் சினிமாவில் காமெடியுடன்... சமூக கருத்துக்களையும் ரசிகர்கள் மனதில் விதைத்தவர் காமெடி நடிகர் விவேக். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரை ஜாம்பவான்களை அறிமுகப்படுத்திய, இயக்குனர் பாலசந்தரால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் விவேக், 90-களில் பல முன்னணி நடிகர்களுடன் காமெடியில் கலக்கியவர். அஜித், விஜய், ரஜினி, கமல், சரத்குமார், விஜயகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.

27

நடிகர் கலைவாணருக்கு பின், கருத்துள்ள காமெடிகளை சொல்லி மக்கள் மத்தியில் பிரபலமானதால் இவருக்கு  சின்னக் கலைவாணர் என ரசிகர்கள் மத்தியில் ஒரு பெயரும் உண்டு. 

Amala Paul: கர்ப்பமாக இருக்கும் அமலா பால்... நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்! வைரலாகும் BTS வீடியோ!

 

37

திரையுலகை தாண்டி சமூக பணிகளிலும் அதிக நாட்டம் கொண்ட விவேக். ABJ அப்துல்கலாம் அவர்களின் தீவிர பக்தர் ஆவார். எனவே அவர் கூறிய வார்த்தைகளை வேத வாக்காக எடுத்து கொண்டு... 1 கோடி மரம் நடுவதை தன்னுடைய வாழ்நாள் லட்சியமாக எடுத்து கொண்டு, நேரம் கிடைக்கும் போதெல்லாம் நம் மண்ணின் செழுமைக்காக மரம் நடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அதே போல் மரம் நடுவதன் அவசியத்தை செல்லும் இடம்மெல்லாம் கூறி ரசிகர்களை ஊக்குவித்து வந்தார்.

47

இந்நிலையில் நடிகர் விவேக் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இழப்பு ரசிகர்களை மட்டும் இன்றி ஒட்டு மொத திரையுலகினரையும் நிலைகுலைய செய்தது.

Harika And Aravish Wedding: சன் டிவி சீரியல் ஹீரோயினுடன்... சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு டும் டும் டும்!

57

தற்போது நடிகர் விவேக்கின் மூத்தமகளான தேஜஸ்வினிக்கு நேற்று அவருடைய தந்தை வாழ்ந்த வீட்டிலேயே எளிமையான முறையில் திருமணம் நடந்துள்ளது. தேஜஸ்வினி - சீரஞ்சீவி பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு... விவேக்கின் கொள்கையை ஊக்குவிக்கும் விதமாக மரக்கன்றுகள், மூலிகை பூச்செடிகள் போன்றவை வழங்கப்பட்டது. 

67

மணமகன் மற்றும் மணமகள் இருவரும் திருமணத்திற்கு பின் செடிகளை நட்டு வைத்தனர். இவர்களின் திருமணத்தில். நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். 

Yashika: யாஷிகாவுடன் CSK மேட்ச் பார்த்து ரணகளம் செய்த.. விஷ்ணு மற்றும் ரவீனா! வைரலாகும் போட்டோஸ்!

77

ஆனால் திருமணத்திற்கு முன்தினம் நடைபெற்ற, திருமண வரவேற்பு... மிகவும் பிரமாண்டமாக நடந்துள்ளது. இதில் விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியன், ரோபோ சங்கர் குடும்பத்தினர் உள்பட ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டு விவேக்கின் மகள் தேஜஸ்வினியை வாழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved