MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஏகே 63 படத்தில் திருமணமாகாத 52 வயது நடிகையுடன் ரொமான்ஸ் செய்யப்போகிறாரா அஜித்... அதிரடியாக வந்த அப்டேட்

ஏகே 63 படத்தில் திருமணமாகாத 52 வயது நடிகையுடன் ரொமான்ஸ் செய்யப்போகிறாரா அஜித்... அதிரடியாக வந்த அப்டேட்

விடாமுயற்சியை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாக உள்ள ஏகே 63 திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 28 2024, 04:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி என்கிற ஆக்‌ஷன் திரைப்படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிக்பாஸ் பிரபலம் ஆரவ், நடிகை ரெஜினா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் விடாமுயற்சி படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

விடாமுயற்சியை தொடர்ந்து அஜித் நடிக்க உள்ள திரைப்படம் ஏகே 63. இப்படத்தை மார்க் ஆண்டனி என்கிற மாஸ் ஹிட் படத்தை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

இதையும் படியுங்கள்... ஷூட்டிங்கை முடிக்காமல் அஜர்பைஜானில் இருந்து அவசர அவசரமாக சென்னை திரும்பிய விடாமுயற்சி படக்குழு - காரணம் என்ன?

34

இந்த நிலையில் இப்படத்தில் அஜித்துடன் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்த அப்டேட் கசிந்துள்ளது. அதன்படி ஏகே 63 திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தபு ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். 52 வயதாகும் இவர் இதற்கு முன்னர் அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து இந்த ஜோடி தற்போது 24 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

44
mark antony

mark antony

தபு மட்டுமின்றி இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் அரவிந்த் சாமி கமிட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு ஆதிக்கின் முந்தைய படமான மார்க் ஆண்டனியில் ஜாக்கி பாண்டியன், மதன் பாண்டியன் என டபுள் ஆக்‌ஷனில் பின்னி பெடலெடுத்த நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யாவையும் ஏகே 63-ல் அஜித்துடன் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம் ஆதிக். இது உறுதியானால் அஜித்துடன் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் முதல் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... தம்பி உடன் டூயட் பாடியாச்சு... அடுத்து அண்ணணுடன் ரொமான்ஸ் செய்ய ரெடியான அதிதி ஷங்கர்..!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved