MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தம்பி உடன் டூயட் பாடியாச்சு... அடுத்து அண்ணணுடன் ரொமான்ஸ் செய்ய ரெடியான அதிதி ஷங்கர்..!

தம்பி உடன் டூயட் பாடியாச்சு... அடுத்து அண்ணணுடன் ரொமான்ஸ் செய்ய ரெடியான அதிதி ஷங்கர்..!

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தற்போது கோலிவுட்டில் அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் நிலையில், அவரின் அடுத்த பட அப்டேட் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 28 2024, 03:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி, கடந்த 2022-ம் ஆண்டு வெளிவந்த விருமன் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார். இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார் அதிதி. முத்தையா இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கிராமத்து நாயகியாக யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி முதல் படத்திலேயே அப்ளாஸ் வாங்கி இருந்தார் அதிதி ஷங்கர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

விருமன் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பின்னர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆனார். இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த மாவீரன் திரைப்படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்து பாக்ஸ் ஆபிஸில் வசூலைப் வாரிக்குவித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கி இருந்தார். இப்படத்தில் ஹீரோயினாக நடித்தது மட்டுமின்றி ஒரு பாடலையும் பாடி இருந்தார் அதிதி.

இதையும் படியுங்கள்... காதலுக்கு வயசு முக்கியம் இல்லையாம் பாஸ்... தன்னைவிட வயதில் மூத்த பெண்களை கரம்பிடித்து செட்டில் ஆன டாப் ஹீரோஸ்

34

தொடர்ந்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்த அதிதி ஷங்கருக்கு மூன்றாவதாக கிடைத்த வாய்ப்பு தான் விஷ்ணு வர்தன் படம். அவர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அதிதி. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திலும் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.

44

இந்த நிலையில், தற்போது அதிதி கைவசம் மேலும் ஒரு படம் சிக்கி உள்ளது. அதன்படி ஓகே ஓகே, எஸ்.எம்.எஸ் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய எம் ராஜேஷ் அடுத்ததாக இயக்கும் படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக அதிதி நடிக்க உள்ளார். முதலில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துவிட்டு பின்னர் சூர்யா படத்தில் கமிட் ஆன அதிதி, தற்போது அதர்வாவின் தம்பி ஆகாஷுக்கு ஜோடியாக நடித்துவிட்டு அடுத்ததாக அதர்வாவுடன் ஜோடி சேர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... விவாகரத்தான ஒரே வருடத்தில் மறுமணம் செய்யபோவதை உறுதி செய்த மெகா ஸ்டார் மகள் நிஹாரிகா! திருமணம் எப்போது?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இயக்குநர் ஷங்கர்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved