விஜய் படங்களை கண்டுகொள்ளாத பாலிவுட்! அஜித் படத்துக்கு தனி மவுசு.. மீண்டும் ஹிந்தியில் ரீமேக் ஆகும் தல படம்!
தல அஜித் நடிப்பில் வெளியானசூப்பர் ஹிட் திரைப்படத்தின் ரீமேக்கில் சல்மான் கான் நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பாலிவுட் திரையுலகில் ஸ்டார் நடிகராக மட்டும் இன்றி மாஸ் நடிகராகவும் இருப்பவர் சல்மான் கான். இவர் ஏற்கனவே தமிழில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் - தமன்னா நடிப்பில் கடந்த 2014 வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, 'வீரம்' படத்தின் இந்தி ரீமேக்காக ஹிந்தியில் எடுக்கப்பட்ட, 'கிசி கா பாய் கிசி கி ஜான்' என்கிற படத்தில் நடித்திருந்தார்.
Thala Ajith Kumar
ஃபேமிலி ஆடியன்ஸ் மற்றும் அஜித் ரசிகர்களை சேடிஸ்பை செய்யும் விதத்தில், வெளியான இந்த படம், தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு, வெற்றி பெற்றதை தொடர்ந்து... ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.
அஜித் நடித்திருந்த கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிக்க, பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம், ஏப்ரல் மாதம் வெளியாகி... ஹிந்தி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் இந்த படத்தை பார்த்த தமிழ் ரசிகர்கள், இது உண்மையிலேயே வீரம் படத்தின் ரீமேக் தானா? என சந்தேகப்படும் விதத்தில் இருந்தது.
படத்தின் கதையை அப்படியே மாற்றி, கூடுதல் மாஸ் காட்சிகளை கூட்டியது தான் இப்படத்தின் மிகப்பெரிய டிரா பேக்காக அமைந்தது. இதை தொடர்ந்து, சல்மான் கான் மீண்டும் அஜித் நடிப்பில் வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் வெயிட்டாக கல்லா கட்டிய, ஒரு படத்தில் தான் நடிக்க உள்ளாராம்.
அஜித் - கவுதம் மேனன் கூட்டணியில், கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான, 'என்னை அறிந்தால்' படத்தின் ரீமேக் குறித்த பேச்சு தற்போது நடந்து கொண்டிருப்பதாகவும், விரைவில் உறுதியான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் படங்களை தேர்வு செய்து நடிக்கும் பாலிவுட் நடிகர்கள் விஜய் படங்களை மட்டும் ஏன்? கண்டு கொள்வதில்லை என்றும் நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.