MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • திரிஷா, ரெஜினாவை தொடர்ந்து... அஜித்தின் விடாமுயற்சி படத்தில் கமிட்டான 3-வது ஹீரோயின் - அடடே இவங்களா..!

திரிஷா, ரெஜினாவை தொடர்ந்து... அஜித்தின் விடாமுயற்சி படத்தில் கமிட்டான 3-வது ஹீரோயின் - அடடே இவங்களா..!

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் திரிஷா, ரெஜினாவை தொடர்ந்து மூன்றாவது ஹீரோயின் ஒருவர் கமிட் ஆகி உள்ளாராம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 18 2023, 03:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
vidaamuyarchi

vidaamuyarchi

நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. தடம் படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார் மேலும் வில்லனாக ஆரவ் மற்றும் சஞ்சய் தத் நடிக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கியது.

24
Ajith, Art director Milan

Ajith, Art director Milan

அதன்படி விடாமுயற்சி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை அஜர்பைஜான் நாட்டில் நடத்தி வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சமயத்தில் அதில் கலை இயக்குனராக பணியாற்றிய மிலன் என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இவர் நடிகர் அஜித்தின் நீண்ட கால நண்பரும் கூட, மிலனின் மறைவு விடாமுயற்சி படக்குழுவினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரின் மறைவால் சில நாட்கள் நடைபெறாமல் இருந்த விடாமுயற்சி ஷூட்டிங் தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Huma Qureshi, Regina

Huma Qureshi, Regina

விடாமுயற்சி படத்தில் இரண்டாவது ஹீரோயினாக ஹூமா குரேஷி நடிப்பதாக இருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வந்ததால் அவர் ஷூட்டிங் தொடங்கும் முன்பே இப்படத்தில் இருந்து விலகிவிட்டார். இதையடுத்து அவருக்கு பதிலாக நடிகை ரெஜினா கசெண்ட்ரா இரண்டாவது ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி உள்ளார். அவரும் தற்போது அஜர்பைஜானில் நடைபெற்று வரும் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்.

44
priya bhavani shankar

priya bhavani shankar

தற்போது லேட்டஸ்ட் அப்டேட்டாக விடாமுயற்சி படத்தில் மூன்றாவதாக ஒரு ஹீரோயின் இணைந்துள்ளார். அவர் வேறுயாருமில்லை, நடிகை பிரியா பவானி சங்கர் தான். கோலிவுட்டின் பிசி நாயகியாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் இப்படத்தின் மூலம் முதன்முறையாக நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்க உள்ளார். இவர் கைவசம் ஏற்கனவே கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் உள்ளது. அப்படத்தை முடித்த கையோடு, விடாமுயற்சி பட வாய்ப்பை தட்டிதூக்கி உள்ளார் பிரியா. 

இதையும் படியுங்கள்... இயக்குனர் ஹரியின் மனைவியா இது... நவராத்திரி கொண்டாடிய ப்ரீத்தாவின் பியூட்டிபுல் போட்டோஸ் இதோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திரிஷா
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved