- Home
- Gallery
- ஒரே ஹீரோயினோடு அப்பா - மகன் ரகசிய உறவா? நாகார்ஜுனா - நாக சைதன்யா பற்றி தீயாய் பரவிய தகவல்; உண்மை பின்னணி என்ன?
ஒரே ஹீரோயினோடு அப்பா - மகன் ரகசிய உறவா? நாகார்ஜுனா - நாக சைதன்யா பற்றி தீயாய் பரவிய தகவல்; உண்மை பின்னணி என்ன?
நாகார்ஜுனாவும் அவரது மகன் நாக சைதன்யாவும் ஒரே ஹீரோயினுடன் ரகசிய உறவில் இருந்ததாக சர்ச்சை வெடித்த நிலையில், அதுபற்றி அவரே விளக்கம் அளித்திருக்கிறார்.

Naga Chaitanya, Nagarjuna
சினிமா நடிகர், நடிகைகள் என்றாலே அவர்களைப் பற்றிய கிசுகிசுக்களுக்கும் பஞ்சமிருக்காது. அப்படி தெலுங்கு திரையுலகில் அதிக கிசுகிசுவில் சிக்கிய நடிகர் என்றால் அவர் நாகார்ஜுனா தான். அவரைப்போலவே சமீப காலமாக அவரது மகன் நாக சைதன்யாவும் நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கி வருகிறார். இந்த நிலையில், நாகார்ஜுனா, நாக சைதன்யா இருவரும் ஒரே நடிகையுடன் ரகசிய உறவில் இருந்ததாக பேச்சு அடிபட்டது அதைப்பற்றி பார்க்கலாம்.
Nagarjuna Akkineni
நாகார்ஜுனா, பாலிவுட் நடிகை தபுவை காதலித்ததாகவும் அவர்கள் இருவரும் தற்போது வரை உறவில் இருப்பதாகவும் ஒரு தகவல் உலா வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக நடிகை தபுவுக்கு தற்போது 50 வயதுக்கு மேல் ஆகியும் அவர் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதற்கு காரணம் நாகார்ஜுனா மீதுள்ள காதல் தான் என்று கூறப்படுகிறது. தபுவை தொடர்ந்து நடிகர் நாகார்ஜுனாவோடு அதிகம் கிசுகிசுக்கப்பட்ட நடிகை என்றால் அது அனுஷ்கா ஷெட்டி தான்.
இதையும் படியுங்கள்... நாட்டாமை வீட்டு பங்க்ஷனுக்கு படையெடுத்து வந்த கோலிவுட் ஸ்டார்ஸோடு அனிதா விஜயகுமார் எடுத்த கலர்புஃல் கிளிக்ஸ்
Nagarjuna, Tabu
நடிகை அனுஷ்காவை சினிமாவில் அறிமுகப்படுத்தியதே நாகார்ஜுனா தான். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அவர் நடித்த சூப்பர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் அனுஷ்கா. இதையடுத்து தம்மருகம், டான், ரகடா போன்ற படங்களிலும் நாகார்ஜுனாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த அனுஷ்கா, அவர் நடித்த கிங் மற்றும் கேடி ஆகிய திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனமும் ஆடி இருந்தார். இப்படி தொடர்ந்து நாகார்ஜுனா படத்தில் நடித்ததால் அனுஷ்கா கிசுகிசுவில் சிக்கினார்.
Nagarjuna, Anushka
இதுகுறித்து நடிகர் நாகார்ஜுனாவே பேட்டி ஒன்றில் மனம்திறந்து பேசி இருக்கிறார். அதன்படி, அவர் கூறியதாவது : “நான் உயரமா இருக்கேன். அதனால எனக்கு பக்கத்துல உயரமான ஹீரோயின் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அந்த ஒரு காரணத்திற்காக தான் அனுஷ்காவை பரிந்துரைத்தேன். அதனால் தான் அவருடன் பல படங்களில் நடித்தேன். அதுதான் விஷயம் வேறொன்றுமில்லை.
Nagarjuna, anushka, naga chaitanya
அதேபோல் நாக சைதன்யாவுக்கும் அனுஷ்காவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகளுக்கும் பதிலடி கொடுத்த நாகார்ஜுனா, நாக சைதன்யாவை விட அனுஷ்கா மூத்தவர். சைதன்யாவை விட அவர் உயரமும் கூட. இருவருக்கும் எப்படி செட் ஆகும். அவரவர் இஷ்டம் போல் பேசுகிறார்கள் என்று நாகார்ஜுனா அந்த பேட்டியில் காட்டமாக தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... Atlee Next Movie : கமலின் கால்ஷீட்டை கொத்தாக தூக்கிய அட்லீ... ஆண்டவரின் அடுத்த பட அப்டேட் இதோ