- Home
- Gallery
- நாட்டாமை வீட்டு பங்க்ஷனுக்கு படையெடுத்து வந்த கோலிவுட் ஸ்டார்ஸோடு அனிதா விஜயகுமார் எடுத்த கலர்புஃல் கிளிக்ஸ்
நாட்டாமை வீட்டு பங்க்ஷனுக்கு படையெடுத்து வந்த கோலிவுட் ஸ்டார்ஸோடு அனிதா விஜயகுமார் எடுத்த கலர்புஃல் கிளிக்ஸ்
சரத்குமார் மகள் வரலட்சுமியின் ப்ரீ வெட்டிங் நிகழ்வில் கலந்துகொண்ட கோலிவுட் பிரபலங்களுடன் எடுத்த புகைப்படங்களை அனிதா விஜயகுமார் பகிர்ந்துள்ளார்.

anitha vijayakumar at varalaxmi sangeeth function
நடிகர் சரத்குமாரின் மகன் வரலட்சுமியின் காதல் திருமண கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன. அவர் நிக்கோலாய் என்பவரை கரம்பிடிக்க உள்ளார். வரலட்சுமியின் ப்ரீ வெட்டிங் நிகழ்வு சென்னையில் உள்ள தாஜ் ஹோட்டலில் நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
anitha vijayakumar with her son
வரலட்சுமி சரத்குமாரின் சங்கீத் பங்க்ஷனில் நடிகர் விஜயகுமாரின் மகளும் மருத்துவருமான அனிதா விஜயகுமார் கலந்துகொண்டார். அவருடன் அவரது மகன் ஸ்ரீஜெய்யும் வந்திருந்தார். அந்த விழாவில் எடுத்த புகைப்படங்களை அனிதா விஜயகுமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Sarathkumar, anitha vijayakumar
மகளின் திருமண விழாவுக்கு வருகை தந்த விஜயகுமார் மகள் அனிதாவை, ஆரத்தழுவி நடிகர் சரத்குமார் அன்போடு வரவேற்றபோது எடுத்த புகைப்படம் இது.
anitha vijayakumar, Radhika
வரலட்சுமியின் ப்ரீ வெட்டிங் விழாவில் கலந்துகொண்ட அனிதா விஜயகுமார், நடிகை ராதிகா சரத்குமாரோடு எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இது.
இதையும் படியுங்கள்... திரிஷா முதல் அனிதா விஜயகுமார் வரை... பிரபலங்களின் வரவால் களைகட்டிய வரலட்சுமி சரத்குமாரின் சங்கீத் பங்க்ஷன்
meena, anitha vijayakumar
மஞ்சக்காட்டு மைனா போல் ஜொலிக்கும் நடிகை மீனாவுடன் அவரின் தோழியான அனிதா விஜயகுமார் எடுத்துக்கொண்ட கியூட்டான போட்டோ இது.
prabhu, anitha vijayakumar
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் பிரபுவும் சரத்குமார் மகள் சங்கீத் விழாவில் கலந்துகொண்டார். அவருடன் அனிதா விஜயகுமார் உற்சாகம் பொங்க எடுத்த போட்டோ இது.
prabhu deva, anitha vijayakumar
இந்தியன் மைக்கெல் ஜாக்சன் பிரபுதேவாவோடு, எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் விஜயகுமார் மகள் அனிதா விஜயகுமார் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
Trisha, anitha vijayakumar
என்றென்றும் இளமையாகவே இருக்கும் சவுத் குயின் திரிஷாவோடு, அனிதா விஜயகுமார் எடுத்துக்கொண்ட அழகிய செல்பி புகைப்படம் இது.
இதையும் படியுங்கள்... Radhika :வரலட்சுமியின் திருமண விழாவில் மகளுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட ராதிகா சரத்குமார் - வைரலாகும் வீடியோ