- Home
- Gallery
- கணவரின் கைகோர்த்து ரொமான்டிக் லுக்.. மாடர்ன் உடையில் கலக்கும் வரலட்சுமி சச்தேவ் - கலக்கல் பிக்ஸ்!
கணவரின் கைகோர்த்து ரொமான்டிக் லுக்.. மாடர்ன் உடையில் கலக்கும் வரலட்சுமி சச்தேவ் - கலக்கல் பிக்ஸ்!
Varalaxmi Sachdev : பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார், மும்பையை சேர்ந்த நிக்கோலை சச்தேவ் என்பவரை கடந்த ஜூலை 3ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

varalaxmi sarathkumar
பிரபல நடிகர் சரத்குமார் மற்றும் அவருடைய மூத்த மனைவி சாயா தம்பதிக்கு, கடந்த 1985ம் ஆண்டு பிறந்த மகள் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார், அவருக்கு வயது 39.
Sachdev
கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி, தாய்லாந்தில் உள்ள ஒரு பிரபல ரிசார்ட்டில் வரலட்சுமிக்கு திருமணம் நடந்து முடிந்தது. மும்பை நகரில் ஆர்ட் கேலரி வைத்திருக்கும் பிரபல தொழிலதிபர் நிக்கோலை என்பவரை தான் அவர் மணந்தார். இந்த திருமணம் தாய்லாந்தில் நடந்த காரணத்தினால், நெருங்கிய குடும்ப உறவினர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்.
Varalaxmi
திருமணத்திற்கு முன்னதாக நடந்த சங்கீத் மற்றும் பிற திருமண நிகழ்வுகளில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பல முன்னணி நடிகர், நடிகைகள் பங்கேற்று, வரலட்சுமி மற்றும் அவரது கணவர் நிக்கோலை சச்தேவ் ஆகிய இருவரையும் வாழ்த்தி சென்றனர்.
Actress Varalaxmi
திருமணம் முடிந்த கையோடு சென்னை வந்து செய்தியாளர்களை சந்தித்த வரலட்சுமி நிக்கோலை ஜோடி, பல முக்கிய தகவல்களை தெரிவித்ததோடு, செய்தியாளர்களுக்கு பெரிய விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
nicholai sachdev
இந்நிலையில் சென்னையில், திருமணத்திற்கு பிறகு நடைபெற்ற நிகழ்வில் வரலட்சுமி மற்றும் அவரது கணவர் நிக்கோலை ஆகிய இருவரும் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை இப்பொழுது வரலட்சுமி சரத்குமார் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார்.