எனக்கும் நகுலுக்கும் கிஸ்ஸிங் சீன்.. 15 டேக்குக்கு மேல போச்சு - அக்கா முன் நகுலை வம்பிழுத்த மணிகண்டன்!
Actor Manikandan : கடந்த 2003ம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான "பாய்ஸ்" திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பல நடிகர் நடிகைகளில் மணிகண்டனும் ஒருவர்.
boys
இன்று திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம்வந்து கொண்டிருக்கும் சித்தார்த், ஜெனிலியா, பரத், மணிகண்டன், நகுல் மற்றும் பிரபல இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலருக்கும், தங்களுடைய முதல் திரைப்படமாக அமைந்தது "பாய்ஸ்" படம் தான் என்றால் அது மிகையல்ல.
manikandan
இந்த படத்திற்கு பிறகு நடிகர் மணிகண்டனைத் தவிர பலருக்கும் பெரிய அளவில் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. குறிப்பாக தமன் வேறொரு பரிமாணத்திற்கே சென்றுவிட்டார் என்றே கூறலாம். ஆனால் நடிகர் மணிகண்டனுக்கு பெரிய அளவில் திரைப்பட வாய்ப்புகள் அதன் பிறகு கிடைக்கவில்லை.
Vascodagama
இருப்பினும் தற்பொழுது தனது சினிமா வாழ்க்கையின் இரண்டாம் இன்னிங்சை அவர் தொடங்கியுள்ளார். இந்த சூழலில் நடிகர் நகுலின் "வாஸ்கோடகாமா" பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் மணிகண்டன், பாய்ஸ் திரைப்படத்தில் தனக்கும், நடிகர் நகுலுக்கும் இடையே எடுக்கப்பட்ட முதல் காட்சி குறித்து நகைச்சுவையான பல சம்பவங்களை பேசியுள்ளார்.
Vascodagama movie
"எனக்கும் நகலுக்கும் எடுக்கப்பட்ட முதல் காட்சியே, நாங்கள் உதட்டோடு உதடு முத்தமிட்டுக் கொள்ளும் காட்சி தான். அதுவும் இயக்குனர் சங்கரைப் பற்றி உங்களுக்கு தெரியும், ஒரு ஷாட் நன்றாக வர வேண்டும் என்பதற்காக, மிகவும் மெனக்கெடுவார். 15 முறைக்கு மேல் அந்த ஷாட் எடுக்கப்பட்டது. ஆனாலும் அதை சகித்துக் கொண்டு சிறப்பாக நடித்தார் நகுல். இப்பொழுது நல்ல பல திரைப்படங்களை அவர் தேர்வு செய்து நடித்து வருகிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" என்று மணிகண்டன் கூறியிருக்கிறார்.
'பாக்கியலட்சுமி' சீரியலில் திடீர் என்ட்ரி கொடுக்கும் அனிதா சம்பத்! என்ன கதாபாத்திரம் தெரியுமா?