- Home
- Gallery
- 'பாக்கியலட்சுமி' சீரியலில் திடீர் என்ட்ரி கொடுக்கும் அனிதா சம்பத்! என்ன கதாபாத்திரம் தெரியுமா?
'பாக்கியலட்சுமி' சீரியலில் திடீர் என்ட்ரி கொடுக்கும் அனிதா சம்பத்! என்ன கதாபாத்திரம் தெரியுமா?
விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும், 'பாக்கியலட்சுமி' சீரியலில் பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான அனிதா சம்பத் அதிரடியாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

விஜய் டிவியில் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் ஒன்று 'பாக்கியலட்சுமி'. கணவரே உலகம் என வாழும் பெண்களால் கூட... கணவரை பிரிந்த பின் முயற்சி செய்தால் பிள்ளைகளின் உறுதுணையோடு சாதிக்க முடியும் என்று அணைத்து பெண்களுக்கும் உத்வேகம் கொடுக்கும் விதமாகவே இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடரில் கடந்த வாரம் முழுக்க, ஈஸ்வரி... ராதிகாவின் அம்மா கொடுத்த பொய் புகாரால் ஜெயிலுக்கு செல்வாரா? அவரை எப்படி பாக்கியா மீட்க போகிறார் என்கிற பரபரப்பான தருணங்கள் காட்டப்பட்டது. ஆனால் ராதிகாவின் மகள் மயூ, சொன்ன சாட்சி ஈஸ்வரியை காப்பாற்றியது.
தற்போது ஈஸ்வரி தன்னுடைய மருமகள் பாக்கியவுடன் சேர்ந்தது மட்டும் இன்றி, கோபியை வெறுக்கும் நிலைக்கு வந்து விட்டார். தனக்கு மகனே இல்லை என்றும் ஒரே ஒரு மகள் அது பாக்கியா என கூறி, கோபியை வெளியே அனுப்பிய நிலையில்... கோபி மீண்டும் தன்னுடைய அம்மாவின் பாசத்தை பெற போராடி வருகிறார்.
இந்நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் ஒரு சமையல் போட்டியில் தான் நடுவராக அனிதா சம்பத் பங்கேற்கிறார். இதுகுறித்த சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
யுவனும் வேண்டாம்.. அமீனும் வேண்டாம்..! ஃப்ரெஷ்ஷான இசையமைப்பாளரை களம் இறக்கும் தளபதியின் மகன் சஞ்சய்!