பையனுக்கு விரைவில் கல்யாணம்.. ஹல்தியில் சும்மா ஜிகுஜிகுன்னு மஞ்சளில் ஜொலித்த உமா ரியாஸ் - கூல் பிக்ஸ்!
Uma Riyaz : பிரபல நடிகை உமா ரியாஸின் மூத்த மகன் ஷாரிக் ஹாசனுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ள நிலையில், இன்று அவருடைய ஹல்தி நிகழ்வு நடைபெற்றது.
actress uma riyaz
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமாகி, தற்போது சிறந்த குணசித்திர நடிகையாக திகழ்ந்த வருபவர் தான் உமா ரியாஸ். அவருடைய கணவர் ரியாஸ் காணும் ஒரு மிகச் சிறந்த நடிகர் ஆவார்.
உடலோடு ஒட்டியபடி இருக்கும்... டைட் உடையில் அழகிய ஆரஞ்சி பழம் போல் போஸ் கொடுக்கும் ஹன்சிகா!
actor riyaz khan
உமா ரியாஸின் மூத்த மகன் ஷாரிக் ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானார். தொடர்ச்சியாக அவர் கோலிவுட் உலகில் நல்ல பல படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
riyaz khan
இந்த நிலையில் ஷாரிக் ஹாசன் தனது நீண்ட நாள் காதலியான மரியா ஜெனிஃபரை வருகின்ற ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி திருமணம் செய்துகொள்ள உள்ளார். அதனைமுன்னிட்டு இன்று அவருடைய ஹல்தி சடங்கு விமர்சையாக நடந்துள்ளது.
shariq haasan
நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த நிகழ்வில், உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஆகிய இருவரும் மஞ்சள் நிற உடை அணிந்து தங்களது மகனின் திருமண வைபோகத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடியுள்ளனர்.