ஆபத்தை உணராமல்... அந்தமானுக்கு போய் இரண்டே நாளில் அடித்து பிடித்து ஊர் திரும்பிய கார்த்திக் சுப்புராஜ்! ஏன்?
சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பை, ஆபத்து அறியாமல் மாலதீவில் உள்ள வைப்பர் பகுதியில் படம்பிடிக்க திட்டமிட்ட கார்த்திக் சுப்புராஜ் அடித்து பிடித்து ஊர் திரும்பிய தகவல் வெளியாகியுள்ளது.
Karthik suburaj movie:
எந்த ஒரு இயக்குனரிடமும், துணை இயக்குனராக பணியாற்றாமல் 'நாளைய இயக்குனர்' என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குறும்படங்களை இயக்கி பிரபலமானவர் கார்த்திக் சுப்புராஜ் . இதைத்தொடர்ந்து அதிரடியாக திரைப்படம் இயக்கும் வாய்ப்பை கைப்பற்றிய கார்த்திக் சுப்புராஜ், விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய 'பீட்சா' திரைப்படம் கார்த்திக் சுப்புராஜுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
suriya 44
இதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய, 'ஜிகர்தண்டா' என்கிற திரைப்படத்தை, வித்தியாசமான கதைகளத்தில் இயக்கி ரசிகர்களுக்கு புது அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதையம் பாபி சிம்ஹா பெற்றார்.
Suriya 44 Movie
ஒரே மாதிரியான திரைப்படங்களை இயக்காமல், தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஏதேனும் வித்தியாசத்தை புகுத்திய கார்த்திக் சுப்புராஜ்... கடைசியாக ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்கிற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது.
Karthik Subbaraj Suriya 44 film update out
தற்போது நடிகர் சூர்யாவை வைத்து பெயரிடப்படாத திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். தற்காலிகமாக சூர்யா 44 என அறியப்படும் இந்த படத்தை சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வரும் நிலையில், அண்மையில் அந்தமானில் உள்ள வைப்பர் பகுதியில் இப்படத்தின் முக்கிய காட்சி ஒன்றை எடுக்க படக்குழு சென்ற நிலையில், அந்த அழகான பகுதிக்குள் இருந்த ஆபத்தை உணராத பட குழுவினர்.. அங்கு பாம்பு அதிக அளவில் இருப்பதால் இரண்டே நாட்களில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறி, சென்னை வந்து சேர்ந்துள்ளனர். இதை தொடர்ந்து சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
பிரதீப் ஆண்டனி விஷயத்தில் நீதி தவறியது தான் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற காரணமா?