தமன்னா மற்றும் விஜய் வர்மா.. டேட்டிங் ஓவர்.. அடுத்து கல்யாணம் தானாம்? தீயாய் பரவும் செய்தி உண்மைதானா?
Tamannaah Bhatia : தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவரும் தமன்னா அண்மையில் லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற இணைய தொடரில் தன்னோடு நடித்த நடிகர் விஜய் வர்மாவுடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்பட்டது.
Vijay Varma
அண்மையில் அவர்கள் இருவரும் இணைந்து வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டது கூட அனைவரும் அறிந்த விஷயம் தான். தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றுள் கொஞ்சம் பிஸியாக நடித்து வரும் நடிகை தான் தமன்னா.
Tamannaah
இதுவரை கவர்ச்சியாக பல கதாபாத்திரங்கள் ஏற்று அவர் நடித்திருந்தாலும், சமீபத்தில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற இணையத் தொடரில் நடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் அந்த இணைய தொடரில் தன்னுடன் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் அவர் டேட்டிங் செய்வதாகவும் கூறப்பட்டது.
Tamannaah and Vijay
அதை இருவரும் ஒப்புக்கொள்ளாத அதே நேரம் அதற்கு அவர்கள் இருவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. மேலும் இதுகுறித்து பேசிய நடிகை தம்மனா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 படபிடிப்பின் போது தான் தங்களுக்குள் நெருக்கம் அதிகமாகியது என்று கூறினார். அதன் பிறகு அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு ஒன்றாக சுற்றுலா சென்று திரும்பியதாகவும் தகவல் வெளியானது.
Tamannaah Bhathia Dating
இந்நிலையில் தம்மனா வீட்டில் அவருக்கு 33 வயது ஆகிவிட்டது என்று கூறி, விரைவில் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமன்னா மற்றும் விஜய் வர்மா ஜோடி எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தங்கள் திருமணம் குறித்து அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.
சூழ்ச்சி செய்யும் செளந்தரபாண்டி... ஷண்முகத்துக்கு ஷாக் கொடுக்கும் பரணி - அண்ணா சீரியல் அப்டேட்