Sri Divya: என்னுடைய திருமணம் இவருடன் தான்! பட வாய்ப்பு கிடைக்காததால் கல்யாணத்துக்கு தயாரான நடிகை ஸ்ரீ திவ்யா!
நடிகை ஸ்ரீதிவ்யா கடந்த 6 வருடங்களாக பட வாய்ப்பு கிடைக்காமல், படாத பாடு படும் நிலையில்... விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவதை சூசகமாக தெரிவிப்பது போல் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
sri divya
தெலுங்கு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக மாறியவர் நடிகை ஸ்ரீ திவ்யா. தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற, 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் மூலம் அறிமுகமானார்.
sri divya
தன்னுடைய முதல் தமிழ் படத்திலேயே, பார்ப்பதற்கு பக்கத்துக்கு வீட்டு பெண் போல், எதார்த்தமான அழகையும், நடிப்பையும் வெளிப்படுத்தி, தன்னுடைய கியூட்னசால் பல இளம் நெஞ்சங்களில் குடியேறினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் - ஸ்ரீ திவ்யா காமினேஷன் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.
புதிய வீட்டில் கணவர் - குழந்தையுடன் குடியேறிய காஜல் அகர்வால்! வைரலாகும் கிரஹ பிரவேச புகைப்படங்கள்!
sri divya
எனவே மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'காக்கி சட்டை' படத்தில் ஜோடி போட்டார். ஆனால் இப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் அளவுக்கு வெற்றிபெறவில்லை என்றாலும், விமர்சனம் ரீதியாக பாராட்டுகளை பெற்றது. இதை தொடர்ந்து ஜீவா, ஈட்டி, மருது, பெங்களூரு நாட்கள், பென்சில் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
sri divya
இதுவரை முகம் சுழிக்கும்படியான காட்சிகளில் நடிக்காமல்... நல்ல பொண்ணுன்னு பெயர் எடுத்த ஸ்ரீ திவ்யா பட வாய்ப்பில்லாமல் தவித்து வருவதற்கு காரணம் கூட குடி போதையில் ஓவர் ஆட்டம் போட்டதால் வந்த வினை தான் என கூறப்படுகிறது. காமெடி நடிகர் ஒருவர் புது வீடு வாங்கிய ஜோரில்... பிரபலங்களுக்கு சரக்கு பார்ட்டி வைத்தநிலையில், இதில் கண்ணுமுன்னு தெரியாமல் குடித்து விட்டு இவர் போட்ட ஆட்டத்தின் வீடியோ வெளியாகி இவரின் மார்க்கெட்டை பதம் பார்த்து விட்டதாம்.
sri divya
இப்படி கூறப்படுவது, நம்பும் வகையில் இல்லை என்றாலும்... சுமார் 5 வருடங்களுக்கு மேலாக ஸ்ரீ திவ்யா எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார். இவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் தற்போது நடித்துள்ள ரெய்டு என்கிற படத்தில் நடித்துள்ள நிலையில் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
sri divya
இந்நிலையில், ஸ்ரீதிவ்யா, சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில்... தன்னுடைய திருமணம் குறித்த கேள்விக்கு ஓப்பனாக பதிலளித்துள்ளார். இதில் தொகுப்பாளர் உங்களுக்கு காதல் திருமணமா? அல்லது பெற்றோர் பார்த்து வைக்கும் மாப்பிள்ளையை தான் திருமணம் செய்து கொள்வீர்களா? என கேள்வி எழுப்ப... எனக்கு கண்டிப்பாக காதல் திருமணம் தான், என்னுடைய காதலனை தான் திருமணம் செய்துகொள்வேன் என தெரிவித்துள்ளார்.
sri divya
இதைத்தொடர்ந்து ரசிகர்கள் சிலர் உங்கள் காதலர் யார் என கேள்வி எழுப்பி வரும் நிலையில், விரைவில் தன்னுடைய திருமண செய்தியுடன்... காதலன் யார் என்பதை ஸ்ரீதிவ்யா அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D