சினிமா.. அரசியல்.. இரண்டிலும் சக்கை போடு போடும் ரோஜா.. அவங்க Net Worth என்ன தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க!
Actress Roja Net Worth : இன்று தனது 51வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள நடிகையும், அமைச்சருமான ஆர்.கே ரோஜா அவர்களுக்கு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Chemparuthi
பிரபல நடிகையும், ஆந்திர பிரதேச அரசின் சுற்றுலா கலாச்சாரம் மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டு துறை அமைச்சருமான ஆர்.கே ரோஜாவிற்கு இந்திய அரங்கில் அறிமுகம் தேவையில்லை. கடந்த 1992 ஆம் ஆண்டு தனது கணவர் ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் வெளியான "செம்பருத்தி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக களமிறங்கினார் ரோஜா.
பல சொகுசு கார்கள்.. மும்பையில் ஆடம்பர வீடு.. சீதா ராமம் நடிகையின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?
Rajinikanth
தான் நடிக்க வந்த 6 ஆண்டுகளில், 50 திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்த ஒரு மிகச்சிறந்த நடிகை. அதிலும் குறிப்பாக இவருடைய நடிப்பில் வெளியான சூரியன், உழைப்பாளி, வீரா மற்றும் ஆயுத பூஜை உள்ளிட்ட பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக மாறியது. தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 130க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ரோஜா கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "என் வழி தனி வழி" என்கின்ற திரைப்படத்தில் நடித்ததோடு தனது திரையுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
RK Roja
அவர் திரைத்துறையில் நடித்து வந்த அதே நேரம் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் ஆந்திர மாநில தேர்தல்களில் போட்டியிட்டு வந்தார். நடிகை ரோஜா 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ஆந்திர மாநிலத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்து வரும் ரோஜாவிற்கு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் பல சொகுசு பங்களாக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவருடைய சொத்து மதிப்பு தற்போது சுமார் 70 கோடி ரூபாய் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.