- Home
- Cinema
- பல சொகுசு கார்கள்.. மும்பையில் ஆடம்பர வீடு.. சீதா ராமம் நடிகையின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?
பல சொகுசு கார்கள்.. மும்பையில் ஆடம்பர வீடு.. சீதா ராமம் நடிகையின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?
பிரபல நடிகை மிருணால் தாக்கூரின் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பிரபல நடிகை மிருணால் தாக்கூர் 2012 இல் முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின்ன் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார், அதன் பின்னர் குங்குமம் பாக்யா தொலைக்காட்சி தொடரில் நடித்தபோது இயக்குனர்களாலும் ரசிகர்களாலும் கவனிக்கப்பட்டார்.
பின்னர் 2018ல் லவ் சோனியா என்ற ஹிந்தி திரைப்படத்தில் மிருணால் தாக்கூர் ஹீரோயினாக அறிமுகமானார். அடுத்த சில ஆண்டுகளில், மிருணால் பாலிவுட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
2019 ஆம் ஆண்டின் வாழ்க்கை வரலாற்று படமான சூப்பர் 30 மற்றும் பாட்லா ஹவுஸ் ஆகியவற்றில் மிருணால் நடித்தார். இதை தொடர்ந்து அவர் நடித்த சில படங்கள் வணிக ரீதியில் தோல்வி அடைந்தாலும், கடந்த ஆண்டு வெளியான சீதா ராமம் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து பல படங்களில் அவர் நடிக்க கமிட் ஆகிஉள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக மிருணால் தாக்கூரின் சொத்து மதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2022 இல் அவரது நிகர மதிப்பு ரூ. 28 கோடியாகவும், 2021 இல் அவரது நிகர மதிப்பு ரூ.16 கோடியாகவும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2020 ஆம் ஆண்டில், அவரது நிகர மதிப்பு ரூ 8 கோடி என்று அறிக்கைகள் வெளிப்படுத்தின. 2019 ஆம் ஆண்டில் மிருனாலின் நிகர மதிப்பு வெறும் 4 கோடி ரூபாய். ஆனால் அவரின் தற்போதைய சொத்து மதிப்பு நிகர மதிப்பு சுமார் 33 கோடி ஆகும்.
மிருணால் தாக்கூரின் மாத வருமானம் ரூ. 60 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. திரைப்படங்கள், விளம்பரங்கள் ஆகியவை மூலம் அவர் பணம் சம்பாதிக்கிறார். மிருணால் தனது பெற்றோருடன் மும்பையில் வசித்து வரும் அவர் பல ஆடம்பர சொகுசு கார்களையும் சொந்தமாக வைத்துள்ளார்.
30 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா ஃபார்ச்சூனர் காரும், 45 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா அக்கார்டும் வைத்திருக்கிறார். நடிகை சமீபத்தில் 2.17 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் சொகுசு காரையும் வாங்கினார். மேலும் மிருணால் சில ஆடம்பர ஹேண்ட் பேக்களையும் வைத்துள்ளார்.
ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த ஹேண்ட் பேக் உட்பட பல ஆடம்பர டிசைனர் ஹேண்ட் பேக்களை அவர் வைத்துள்ளார். மேலும் ரூ.1.27 லட்சம் மதிப்புள்ள ஒரு சொகுசு பிராண்டின் லெதர் ஸ்லிங் பேக்கும் வைத்திருக்கிறார்.
மிருணால் திரைப்படத்திற்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தனது கட்டணத்தை 85 லட்சத்தில் இருந்து 2 கோடியாக உயர்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அவர் தனது சம்பளத்தை 135% உயர்த்தியுள்ளார்.