"ரூமுக்கு வந்துட்டு போனு சொன்னார்".. பிரபல நடிகர் பாலகிருஷ்ணா மீது குற்றச்சாட்டு - குமுறிய ரஜினி பட நடிகைகள்!
Nandamuri Balakrishna : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடித்துள்ள இரு முன்னணி நடிகைகள், பிரபல நடிகர் பாலகிருஷ்ணா மீது கூறிய குற்றச்சாட்டு குறித்து பார்க்கலாம்.
Actor Balakrishna
தெலுங்கு திரையுலகிலும், அரசியல் களத்திலும் மிகப்பெரிய ஆளுமையாக விளங்கி வந்த என்.டி இராமா ராவின் மகன் தான் பாலகிருஷ்ணா. இவர் இப்பொழுது தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராகவும் அரசியல் தலைவராகவும் வளம் வந்து கொண்டிருக்கிறார். இப்பொது 64 வயதாகும் பாலகிருஷ்ணா, தனது 14 வயது முதல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Balakrishna Movies
தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் வார்த்தையில் வர்ணிக்க முடியாத அளவிற்கு வரவேற்பு கொண்டுள்ள பாலகிருஷ்ணா, அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்கி வருவதும் அனைவரும் அறிந்ததே. சில மாதங்களுக்கு முன்பு கூட, நடிகை அஞ்சலியை மேடையில் வைத்து அவர் தள்ளி விட்டது தொடர்பாக அவர் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அன்று அவர் குடித்துவிட்டு வந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இரு ரஜினி திரைப்பட நடிகைகள் அவருடைய நடத்தை குறித்து பேசி இருக்கின்றனர்.
radhika apte
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "கபாலி" திரைப்படத்தில் அவரோடு இணைந்து நடித்த பிரபல நடிகை ராதிகா ஆப்தே, பாலகிருஷ்ணாவோடு "Lion" என்ற திரைப்படத்தில் பணியாற்றினார். அந்த திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்தபோது, ஷூட்டிங் வரும் அனைவரும் தன் காலில் விழுந்து வணங்கிவிட்டு தான் ஷூட்டிங் செய்ய செல்ல வேண்டும் என்று பாலகிருஷ்ணா கூறியதாக ராதிகா கூறியுள்ளார். மேலும் இறுதி நாள் சூட்டிங் முடிந்தபோது, தன்னை அவருடைய ரூமிற்கு வந்துவிட்டு செல்லுமாறு அவர் கூறியதாகவும் ஒரு மேடையிலேயே பரபரப்பாக கூறியுள்ளார் ராதிகா ஆப்தே.
vichitra
ரஜினியின் முத்து படத்தில் நடித்த நடிகை தான் விசித்ரா, அதற்கு முன்பிலிருந்தே அவர் கவர்ச்சி நாயகியாக பல மொழி படங்களில் நடித்துள்ளார். கடந்த 2001ம் ஆண்டு இவர் நடிகர் பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தின்போது ஒரு நாள் அவர் தன்னை ரூமுக்கு அழைத்ததாக, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அதுகுறித்து பகிர்ந்துள்ளார் விசித்ரா.