இதெல்லாம் ரொம்ப ஓவர்! சரக்கடித்துக்கொண்டு... கையில் சைடிஷுடன் மது பிரியர்களுடன் அட்வைஸ் கூறிய ஓவியா!
நடிகை ஓவியா சரக்கடித்து கொண்டு, பெரிய மனதுடன் மது பிரியர்களுக்கு அட்வைஸ் கூறியுள்ளார். மேலும் இவருடைய ரீசென்ட் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Kollywood Actress Oviya
மலையாள நடிகையான ஓவியா, தமிழில் அறிமுகமானது 'நாளை நமதே' என்கிற திரைப்படம் என்றாலும், இவருக்கு சிறந்த அறிமுகத்தை கொடுத்தது இயக்குனர் சற்குணம் இயக்கத்தில், 2010 ஆம் ஆண்டு விமலுக்கு ஜோடியாக நடித்த களவாணி திரைப்படம் தான். காமெடி கதை களத்தில் உருவான இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம், புலிவால், யாமிருக்க பயமேன், போன்ற பல தமிழ் படங்களில் நடித்தார்.
Actress Oviya participate Biggboss
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ள ஓவியா... தமிழ் பட வாய்ப்புகள் குறைந்த பின்னர், பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். குறைந்த நாட்களிலேயே தன்னுடைய எதார்த்தமான சுபாவத்தாலும், நேர்மையாலும் பல ரசிகர்கள் மனதை கவர்ந்த ஓவியா, பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் வெற்றியாளராக மாற வேண்டும் என அவருக்கு தனி ஆரம்பித்து அவரை கொண்டாடினர் ரசிகர்கள்.
லூஸ் ஹேரில்.. எடுப்பான சேலையில் - கவர்ச்சி அலை வீசிய ஐஸ்வர்யா தத்தா!
Oviya love with Aarav.
எனினும், ஆரவ் மீது ஏற்பட்ட காதலாலும்... அவரால் ஏமாற்றப்பட்டதாலும் மன உளைச்சலுக்கு ஆளான ஓவியா, தனக்கு பயோ போலார் டிஸ்ஆர்டர் என்கிற பிரச்சனை இருப்பதாக கூறி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவதாக கூறினார். திடீரென தண்ணீருக்குள் மூழ்கி தற்கொலைக்கு முயன்றதால், அதிரடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
oviya treatment
மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்ட பின்னர், மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் ஓவியா வருவாரா? என பலரும் எதிர்பார்த்த நிலையில்... பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் விருந்தினராக மட்டுமே பங்கேற்றார்.
oviya movies
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகையாக மாறிய ஓவியா, மீண்டும் திரையுலகில் நல்ல இடத்தை பிடிப்பார் என பலரும் நினைத்தனர். ஆனால் ஓவியா நடித்த 90 எம் எல், திரைப்படம் வெளியாகி தோல்வியை சந்தைத்தது. அதே போல் கணேஷா மீண்டும் சந்திப்போம், காஞ்சனா 3, ஓவியா விட்டார் யாரு, களவாணி 2 போன்ற படங்களில் ஓவியா கதாபாத்திரம் பெரிய அளவில் கவனிக்கப்படாமல் போனது.
oviya advice:
தற்போது பாமர அங்கிள், சம்பவம், ராஜபீமா, ஆகிய படங்கள் இவருடைய நடிப்பில் தயாராகி உள்ள நிலையில்,விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிப்பில் பிஸியாக இல்லாவிட்டாலும், அவ்வப்போது சோசியல் மீடியாவில் சில கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கும் ஓவியா, தற்போது பக்கத்தில் சரக்கை வைத்துக்கொண்டு... கையில் பொறித்த நண்டை சைடிஷ் ஆக சாப்பிட்டுக் கொண்டே...' ட்ரிங்கிங் இஸ் இஞ்சூரிஸ் டூ ஹெல்த். அதாவது குடி உடல் நலத்திற்கு கேடு என்கிற கேப்ஷனுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் படு வைரலாகி வருகிறது. இதெல்லாம் கொஞ்சம் ஓவர் என ரசிகர்களும் தங்களின் கருத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
"நான் திரும்ப வந்துட்டேனு சொல்லு" மாஸ் படங்களுடன் கம் பேக் கொடுக்கும் SAM!