- Home
- Gallery
- 10th பெயிலா?... எவ்வளவு சம்பளம்? தன்னைப்பற்றி கூகுளில் அதிகம் தேடப்பட்ட கேள்விகளுக்கு யோகிபாபு அளித்த பதில்கள்
10th பெயிலா?... எவ்வளவு சம்பளம்? தன்னைப்பற்றி கூகுளில் அதிகம் தேடப்பட்ட கேள்விகளுக்கு யோகிபாபு அளித்த பதில்கள்
கூகுளில் நடிகர் யோகிபாபு குறித்து அதிகம் தேடப்பட்ட கேள்விகளுக்கு அவரே ஓப்பனாக பதில் அளித்து இருக்கிறார்.

Yogibabu
தமிழ் திரையுலகில் கோலோச்சிய காமெடி நடிகர்கள் என்றால் வெகுசிலரே, அந்தப் பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் நகைச்சுவை நடிகர் யோகிபாபு. தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோயின் இல்லாமல் கூட படங்களை எடுக்கிறார்கள், ஆனால் யோகிபாபு இல்லாத படங்கள் இல்லை, அந்த அளவுக்கு செம்ம டிமாண்ட் உள்ள காமெடியனாக திகழ்ந்து வருகிறார் யோகிபாபு. அவர் கைவசம் உள்ள படங்களே டஜன் கணக்கில் இருக்கும்.
comedy actor yogibabu
இப்படி பிசியாக நடித்து வரும் யோகிபாபு அவ்வப்போது கதையின் நாயகனாகவும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கு முன்னர் அவர் கதையின் நாயகனாக நடித்த மண்டேலா, பொம்மை நாயகி ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அவர் ஹீரோவாக நடித்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வரும் படம் தான் போட். இப்படத்தை சிம்புதேவன் இயக்கி இருக்கிறார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 2ந் தேதி திரைக்கு வர உள்ளது.
இதையும் படியுங்கள்... MGR முதல் தனுஷ் வரை... டாப் ஹீரோஸின் 50வது பட ரிசல்ட் ஒரு பார்வை
yogibabu salary
இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற யோகிபாபு, தன்னைப்பற்றி கூகுளில் அதிகம் தேடப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். பொதுவாக சினிமா நடிகர், நடிகைகள் தங்களைப் பற்றிய வயசையும், சம்பளத்தையும் வெளியில் சொல்ல மாட்டார்கள். கூகுளில் அதிகம் தேடப்பட்ட கேள்விகளில் அந்த இரண்டு கேள்விகள் இருந்தும் அதற்கு பதில் கூற மறுத்துவிட்டார் யோகிபாபு. இதையடுத்து தன்னைப்பற்றிய காமெடி நடிகர்கள் யார் என்கிற கேள்விக்கு, கவுண்டமணி, செந்தில் என பதிலளித்தார். அதேபோல் எம்.ஆர்.ராதாவையும் தனக்கு ரொம்ப புடிக்கும் என கூறினார்.
Yogibabu answers
அதேபோல் யோகிபாபுவின் கல்வி தகுதி பற்றிய கேள்வியும் அதில் இடம்பெற்று இருந்தது. அதற்கு தான் 10th பெயில் என கூறிய அவர், அதன்பின் ஸ்கூலுக்கு செல்லாமல் கிரிக்கெட் ஆடிக்கொண்டு இருந்ததாக தெரிவித்தார். தான் நடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் படங்கள் பற்றி பேசிய யோகிபாபு, போட் மற்றும் விஜய்யின் கோட் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆவதாக கூறினார். பின்னர் கைவசம் உள்ள படங்கள் பற்றி கூறிய அவர், விஜய்யின் 69வது படம், அஜித்தின் அடுத்த படம், மடோன் அஸ்வின் உடன் ஒரு படம், தாராள பிரபு பட இயக்குனருடன் ஒரு படம் லைன் அப்பில் உள்ளதாக கூறினார். தனக்கு பிடித்த ஹீரோயின் பற்றிய கேள்விக்கு எல்லாருமே பிடிக்கும் என மழுப்பலான பதிலை சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டார் யோகிபாபு.
இதையும் படியுங்கள்... Vidaamuyarchi: அதே ரோடு.. அப்போ அஜித்; இப்போ ஆக்ஷன் கிங்- விடாமுயற்சி வில்லன் அர்ஜுனின் மாஸ் லுக் போஸ்டர் இதோ