- Home
- Gallery
- Aishwarya Rajesh: கருப்பு சேலையில்... ஸ்லீவ் லெஸ் பிளவுஸ் கவர்ச்சியோடு ஐஸ்வர்யா ராஜேஷ் நடத்திய போட்டோ ஷூட்!
Aishwarya Rajesh: கருப்பு சேலையில்... ஸ்லீவ் லெஸ் பிளவுஸ் கவர்ச்சியோடு ஐஸ்வர்யா ராஜேஷ் நடத்திய போட்டோ ஷூட்!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கருப்பு நிற சேலையில்... எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வாழ்க்கையில் எத்தனை சவால்கள் வந்தாலும், அதை ஒரு தடையாய் நினைத்து சோர்ந்து விடாமல் தொடர்ந்து தன்னுடைய இலக்கை நோக்கி ஓடி வெற்றிபெறுபவர்கள் ஒரு சிலரே... அப்படி தன்னுடைய வெற்றியை மட்டுமே குறிக்கோளாக வைத்து, பல கஷ்டங்களை கடந்து சாதித்த நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவரது முதல் அறிமுகம் சின்னத்திரை தான். சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அசத்தப்போவது யாரு' என்கிற காமெடி ஷோவை, தன்னுடைய பாணியில் மிகவும் கலகலப்பாக தொகுத்து வழங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், இதை தொடர்ந்து கலா மாஸ்டர் நடுவராக இருந்த 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி, டைட்டிலை தட்டி தூக்கினார்.
தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் தேடுவதிலும் தீவிரம் காட்டிய இவருக்கு, குடும்பத்திலும் ஏகப்பட்ட பிரச்சனைகள் அப்போது இருந்தது. எனினும் தன்னுடைய முயற்சியை தளர்த்தி கொள்ளாமல் போராடிய இவருக்கு, 2010 ஆம் ஆண்டு 'நீதான அவன்' என்கிற படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து இதே மாதிரியான கதாபாத்திரங்கள் கிடைத்தாலும், அசராமல் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு... அட்டகத்தி திரைப்படம் நல்ல துவக்கமாக அமைந்தது.
இதை தொடர்ந்து இவர் நடித்த ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் போலீஸ் போன்ற படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஆனால் இவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது என்றால் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்த காக்கா முட்டை திரைப்படம் தான்.
இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் கதையின் நாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தற்போது முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற்றுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழை தவிர தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவரின் கைவசம், மூன்று தமிழ் படங்கள் உட்பட இரண்டு மலையாள படங்கள் உள்ளன.
மேலும் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் தன்னுடைய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கருப்பு நிற சேலையில்... ஸ்லீவ் லெஸ் பிளஸ் அணிந்து அளவான கவர்ச்சியில், குறையாத அழகுடன் வெளியிட்டுள்ள போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.