- Home
- Gallery
- கல்யாணமாகி 14 வருஷமாச்சு.. இப்பொது குழந்தையை தத்தெடுக்க காரணம் என்ன? - மனம் திறந்த அபிராமி!
கல்யாணமாகி 14 வருஷமாச்சு.. இப்பொது குழந்தையை தத்தெடுக்க காரணம் என்ன? - மனம் திறந்த அபிராமி!
தமிழில் கடந்த 2001ம் ஆண்டு ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில் என்ற படத்தின் மூலம் கதையின் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அபிராமி. கேரளாவில் பிறந்த இவர், குழந்தை நட்சத்திரமாகவும் பல படங்களில் நடித்துள்ளார்.

Abhirami Photos
குழந்தை நட்சத்திரமாக தனது கலையுலக பயணத்தை துவங்கிய அபிராமி, கல்லூரியில் படிக்கும் போது மலையாள சேனலில் தொகுப்பாளராக பணியாற்றினார். அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமானதை அடுத்து அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த வகையில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான பத்ரம் என்கிற மலையாள படம் மூலம் அறிமுகமானார் அபிராமி.
Annalakshmi
இதற்கு அடுத்த ஆண்டு தான், தமிழில் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த வானவில் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் அவர். அதன் பிறகு இளைய திலகம் பிரபுவுடன் மிடில்கிளாஸ் மாதவன், சரத்குமாருடன் சமுத்திரம் மற்றும் தோஸ்த். மீண்டும் பிரபுவுடன் சார்லி சாப்ளின் போன்ற தமிழ் படங்களில் வரிசையாக நடித்து வந்தார்.
இந்த சூழலில் அவருக்கு கிடைத்த மாபெரும் வாய்ப்பு தான் விருமாண்டி, உலக நாயகனுக்கு ஜோடியாக, மிக நேர்த்தியாக நடித்திருந்தார் என்று கூறுவதை விட அன்னலட்சுமியாக வாழ்ந்தார் என்றே கூறலாம். ஆனால் அந்த படம் வெளியான பிறகு சுமார் 10 ஆண்டுகள் அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை, மாறாக தனது சிறுவயது நண்பர் ராகுல் பவனம் என்பவரை 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
Abhirami
சுமார் 14 ஆண்டுகள் அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளாத நிலையில், இந்த 2023ம் ஆண்டு அந்த தம்பதி ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தனர். இப்பொது 14 ஆண்டுகள் கழித்து அந்த குழந்தையை தத்தெடுக்க என்ன காரணம் என்பதை கூறியுள்ளார் அபிராமி. சிறு வயது முதலே தனக்கு குழந்தைகளை தத்தெடுப்பது குறித்த ஒரு மிகப்பெரிய ஆசை இருந்து வந்ததாகவும், ஏற்கனவே அவருடைய குடும்பத்தில் அவருடைய மாமாவும் அத்தையும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்ததை கண்டு வளர்ந்தவர் அவர் என்பதாலும், தத்தெடுப்பதன் மீதான ஆர்வம் தனக்கு அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
Abhirami Daughter
அவரும் அவரது கணவரும் அமெரிக்காவில் ஒன்றாக வாழ்ந்து வந்த காலத்திலேயே அவர்கள் குழந்தையை தத்தெடுக்க முனைந்ததாகவும். ஆனால் அந்த பாக்கியம் அவர்களுக்கு இந்தியா வந்த பிறகு தான் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
Vijay Antony Movie: விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படத்தின் ரிலீஸ் தேதி அதிரடி மாற்றம்!