Asianet News TamilAsianet News Tamil

Vijay Antony Movie: விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படத்தின் ரிலீஸ் தேதி அதிரடி மாற்றம்!

விஜய் ஆண்டனி நடிப்பில், வெளியான 'பிச்சைக்காரன்' படத்திற்கு பின்னர் வெளியாக இருந்த 'ரத்தம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

Vijay Antony starring Ratham movie Release date changed mma
Author
First Published Sep 12, 2023, 6:05 PM IST

தனது தனித்துவமான கதைத் தேர்வினால், பாக்ஸ் ஆஃபிசில் வசூல் நாயகனாக மாறியுள்ள நடிகர் விஜய் ஆண்டனியின் அடுத்தத் திரைப்படமாக 'ரத்தம்' வெளியாக உள்ளது. இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் தயாரிப்பில் சி.எஸ். அமுதன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கும் இந்தத் திரைப்படம் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், தற்போது அதிரடியாக அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க பட்டுள்ளது.

Vijay Antony starring Ratham movie Release date changed mma

'தமிழ் படம்' படத்தின் பிரம்மாண்ட வெற்றி மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த இயக்குநர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் வித்தியாசமான பொலிடிகல் திரில்லர் திரைப்படமாக 'ரத்தம்' உருவாகியுள்ளது. விஜய் ஆண்டனியுடன் இணைந்து மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த 'ரத்தம்' திரைப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, TS.சுரேஷ் படத்தொகுப்பு செய்கிறார். கண்ணன் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். செந்தில் ராகவன் கலை இயக்குநராகப் பணியாற்றி இருக்க, திலிப் சுப்ராயன் ஸ்டன்ட் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

Vijay Antony starring Ratham movie Release date changed mma

கடந்த சில தினங்களுக்கு முன்பு 'ரத்தம்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி மூன்று மில்லியன் பார்வைகளை தாண்டி யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது. விஜய் ஆண்டனியின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள 'ரத்தம்' படம் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகும் என்பதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த படம் திடீர் என ஒருவாரம், தாமதமாக ரிலீஸ் செய்ய என்ன காரணம் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios