MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இந்த மனசு தான் சார் கடவுள்! உடைந்த கையில் ஏற்பட்ட வலி.. மக்கள் தான் முக்கியம் உதவ ஓடி வந்த நடிகர் விஜய் விஷ்வா

இந்த மனசு தான் சார் கடவுள்! உடைந்த கையில் ஏற்பட்ட வலி.. மக்கள் தான் முக்கியம் உதவ ஓடி வந்த நடிகர் விஜய் விஷ்வா

கடுமையான மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் உள்ள மக்களுக்கு போட்ட மூலம் சென்று உதவி வருகிறார் நடிகர் விஜய் விஸ்வா. இவரின் செயலுக்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 22 2023, 11:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

 தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரமாக கடும் மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் புகுந்து பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிப்படைய செய்துள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29

பெரும்பாலான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம், துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர், உணவு உட்பட எந்த அடிப்படை வசதியும் இன்றி மக்கள் படாதபாடுபட்டு வருகின்றனர். 

தேடி வந்த விஜய் - அஜித் வாய்ப்பு..! கோடிகளில் சம்பளம் பேசியும் நடிக்க மறுத்த இளம் நடிகை! ஏன் தெரியுமா?

39

இந்த நிலையில் தூத்துக்குடி சேர்ந்த நண்பர் கணேசன் மற்றும் சுவர்ணலதா ஆகியோர், விஜய் விஷ்வாவுக்கு அங்குள்ள நிலையை எடுத்து கூறி உதவி வேண்டும் என அழைத்துள்ளனர். போன் மூலம் மக்கள் நிலையை அறிந்த விஜய் விஷ்வா... ஹைதராபாத்தில் நடித்து கொண்டிருந்த படப்பிடிப்பு பணிகளை அப்படியே விட்டு விட்டு முதல் ஆளாக மக்களுக்கு உதவ ஓடோடி வந்துள்ளார்.

49

அவசர அவசரமாக இவர் கிளம்ப வேண்டி இருந்ததால்... காரிலேயே அங்கிருந்து தூத்துக்குடி செல்ல முடிவு செய்தார். சமீபத்தில் தான் இவருக்கு ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடித்த போது கை மணிக்கட்டு உடைந்து... சுமார் 6 மாத சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க துவங்கினார்.

ஆத்தங்கரை அழகே!! கேரள புடவையில் மாராப்பை முறுக்கி போட்டு... ஸ்ட்ராப் லெஸ் ஜாக்கெட்டில் தர்ஷா குப்தா!

59

அதிக நேரம் கார் ஓட்டினால் கையில் வலி ஏற்படும் வீக்கம் ஏற்படும் என்று தெரிந்தும்... டிரைவர் கிடைக்காததால், அவரே கை வலியோடு காரை ஓடிக்கொண்டு ஹைதராபாத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வந்தார்.

69

பின்னர் நிவாரண பொருட்கள் டூத் பேஸ்ட், பிரஸ் உடல் வலி மாத்திரைகள், ஓஆர்எஸ் குளுக்கோஸ், கோதுமை மாவு, பிஸ்கட், ஷாம்பு, நாப்கின்ஸ், போன்ற பொருட்களை வாங்கி, தூத்துக்குடி சேர்ந்த மீனவர் படகோட்டி சலார்க்கின் அவர்களது துணையுடன், விநியோகம் செய்யப்பட்டது.  

DD3 Update: தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் முக்கிய அப்டேட்..! நாள் குறித்த படக்குழு..!

79

தனசேகரன் நகர், முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், ராஜிவ் நகர் போன்ற தெருக்களில் 3000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இன்னும் அடிப்படை வசதி இன்றி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், தன்னால் இயன்ற பொருட்களை வழங்கினார். மக்களும் கண் கலங்கி நன்றி தெரிவித்தனர்.

89

இன்னும் பல இடங்களில் மின்சாரமும் குடிநீரும் வராத நிலையில், மக்கள் மிகுந்த அவதியற்றி வருகின்றனர்.எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழ்ந்து நிற்பதால், பாம்பு பூச்சி அட்டை, போன்ற விஷ ஜந்துகளுடன் மக்கள் போராடி வருகிறார்கள்.

Prabhu Daughter Marriage: ஐஸ்வர்யாவின் 2-ஆவது திருமணத்திற்கு 500 கோடி வரதட்சிணை கொடுக்கப்பட்டதா? பிரபு தகவல்!

99

விஜய் விஷ்வா... கொண்டு சென்ற படகில் அவரால் முடிந்த அளவுக்கு மக்களை வெள்ளத்தில் இருந்து மீட்டு முகாம்களில் கொண்டு வந்து சேர்த்துள்ளார். சமீபத்தில் மிக்ஜாம் புயல் சென்னையை பதம் பார்த்த போது.. விஜய் விஷ்வா மக்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved