- Home
- Gallery
- ஜோதிகாவின் மெஹந்தி நிகழ்ச்சியில்... கிளீன் ஷேவ் லுக்கில் ஷர்வானியில் கலக்கும் சூர்யா! Throw Back போட்டோஸ்!
ஜோதிகாவின் மெஹந்தி நிகழ்ச்சியில்... கிளீன் ஷேவ் லுக்கில் ஷர்வானியில் கலக்கும் சூர்யா! Throw Back போட்டோஸ்!
நடிகர் சூர்யா - ஜோதிகா நட்சத்திர தம்பதிகளின், மெஹந்தி சடங்கின் போது எடுக்கப்பட்ட த்ரோ பேக் போட்டோஸ் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன் என்கிற அடையாளத்துடன் கடந்த 1997-ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளியான 'நேருக்கு நேர்' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். விஜய் - சூர்யா இருவரும் இணைந்து நடித்த இப்படம், வெற்றிபெறவில்லை என்றாலும், சூர்யாவுக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.
அதன்படி, காதலே நிம்மதி, சந்திப்போமா, பெரியண்ணா, போன்ற படங்களில் நடித்தார். விஜயகாந்துடன் சேர்ந்து நடித்த 'பெரியண்ணா' வசூல் ரீதியாக சூர்யாவுக்கு முதல் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து, நடிகை ஜோதிகாவுடன் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தார். முதல் படத்திலேயே இருவருக்கும் இடையே ஒரு வைப் உண்டான நிலையில் பின்னர் அதுவே இருவரும் காதலுக்கு வழிவகுத்தது.
சூர்யா - ஜோதிகா காம்போ ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட நிலையில்... இருவரும் இணைந்து, காக்க காக்க, மாயாவி, சில்லுனு ஒரு காதல், என தொடர்ந்து ஜோடி போட்டனர். ஜோதிகா இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், ஆரம்பத்தில் சூர்யாவின் தந்தை சிவகுமார் இவர்களின் காதலை ஏற்றுக்கொள்ளாத நிலையில், சூர்யா தன்னுடைய காதல் விஷயத்தில் உறுதியாக இருந்ததால்... ஒப்புக்கொண்டார்.
சூர்யாவின் தந்தை ஜோதிகா திருமணத்திற்கு பின்னர் நடிக்க கூடாது என நிபந்தனை விதித்த நிலையில், ஜோதிகாவும் திருமணத்திற்கு பின்னர் முழுமையாக திரையுலகில் இருந்து விலகினார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னர், தன்னுடைய கணவரின் சம்மதத்தின் பெயரிலேயே மீண்டும் நடிக்க துவங்கினார்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன், கணவர் குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆன ஜோதிகா... பாலிவுட் படங்களில் வரிசை கட்டி நடித்து வருகிறார். அதே போல் சூரியாவும் பாலிவுட் திரையுலகில் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியாக உள்ள, 'சூரரை போற்று' திரைப்படத்தின் ரீமேக் மூலம் தயாரிப்பாளராக மாறியுள்ளார்.
2006-ஆம் ஆண்டு சூர்யாவும் ஜோதிகாவும் திருமணம் செய்து கொண்ட நிலையில், 18 வருடங்கள்... மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்ந்து வரும் இவர்களின், திருமணத்திற்கு முன்பு நடத்தப்பட்ட மெஹந்தி சடங்கின் த்ரோ பேக் போட்டோஸ் தற்போது மீண்டும் சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. இதில் ஜோதிகா ஆரஞ்சி நிற டாப் மற்றும் தலையில் முக்காடு போட்டபடி இருக்க, சூர்யா கிளீன் ஷேவ் லுக்கில் மெரூன் கலர் ஷ்ரவாணியுடன் அனைவரையும் வரவேற்கிறார். இதுகுறித்த போட்டோஸ் இதோ...