- Home
- Gallery
- Manthra: அந்த இயக்குனரால் என் கேரியரே பாழாப்போச்சு! 43 வயதில் அழுது புலம்பும் விஜய் - அஜித் பட நடிகை மந்திரா?
Manthra: அந்த இயக்குனரால் என் கேரியரே பாழாப்போச்சு! 43 வயதில் அழுது புலம்பும் விஜய் - அஜித் பட நடிகை மந்திரா?
மகேஷ் பாபு பட இயக்குனரால் தன்னுடைய கேரியரே, பாழாகிவிட்டது என பிரபல நடிகை மந்திரா கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை மந்திரா . இவரின் இயற்பெயர் விஜயா என்றாலும், தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமான போது ராசி என்கிற பெயரிலும், தமிழில் மந்திரா என்கிற பெயரிலும் நடிக்க துவங்கினார்.
1988-ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தெலுங்கில் தன்னுடைய கேரியரை துவங்கிய இவர், பின்னர் ஹீரோயினாக மாறினார். தமிழில் 1996 -ஆம் ஆண்டு அருண் விஜய் ஜோடியாக 'பிரியம்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும்... அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
அந்த வகையில் விஜய்யுடன் லவ் டுடே, அஜித்துடன் ரெட்டை ஜடை வயது, உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பின்னர் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் ஹீரோயினாக நடிக்க துவங்கினார்.
தமிழை விட தெலுங்கு திரையுலகில் அதிக கவனம் செலுத்திய இவர், 2003-ஆம் ஆண்டு நடித்த திரைப்படம் தான் தன்னுடைய இமேஜை பாதித்து, கேரியரையே நாசமாக்கி விட்டதாக தெரிவித்துள்ளார். மகேஷ் பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி உள்ளவர் இயக்குனர் தேஜா.
அவர் இயக்கிய 'நிஜம்' என்கிற படத்தில், ஜெயம் படத்தின் வில்லனாக நடித்த கோபிசந்துக்கு ஆசை நாயகியாக மந்த்ரா நடித்தார். எல்லை மீறிய காட்சிகளில் நடித்ததால் தான், அதன் பின்னர் தனக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதாகவும், தன்னுடைய சினிமா கேரியர் பாழானதாக தெரிவித்துள்ளார்.
இயக்குனர் தன்னிடம் கதை கூறும் போது வேறு மாதிரி கூறியதாகவும், ஆனால் எடுக்கும் போது வேறு மாதிரி எடுத்து விட்டதாக குற்றம் சட்டியுள்ள மந்த்ரா, அட்வான்ஸ் வாங்கி விட்டதால், விருப்பமே இல்லாமல் நடைத்ததாகவும் கூறியுள்ளார். இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களோ அப்போ நடிச்சிட்டு இப்போ அழுது புலம்பி என்ன பிரயோஜனம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்
2005-ஆம் ஆண்டு ஸ்ரீ முனி என்கிற இயக்குனரை திருமணம் செய்து கொண்ட இவர், கடைசியாக 2017-ஆம் ஆண்டு லங்கா என்கிற படத்தில் தான் நடித்திருந்தார். பின்னர் ஜெமினி டிவி, ஸ்டார் மா போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.