Simbu Net Worth: 1 வயதில் குழந்தை நட்சத்திரம்.. 18 வயசில் ஹீரோ.! இப்போ 40 வயதாகும் சிம்புவின் சொத்து மதிப்பு?
தன்னுடைய ஒரு வயதில், நடிக்க துவங்கிய நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
T.Rajendar Son Simbu:
நடிகர் சிம்பு, இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறமையாளராக விளங்கும் டி.ராஜேந்திரனின் மூத்த மகனாவார். டி.ராஜேந்தர் தான் இயக்கிய திரைப்படத்தில், சிம்புவை ஒரு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். அதன்படி சிம்பு அறிமுகமானது 1984ம் ஆண்டு வெளியே வந்த 'உறவைக் காத்த கிளி' என்கிற படம் தான்.
Simbu Started Acting at the age of 1
இதை தொடர்ந்து மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், மோனிஷா என் மோனாலிஷா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். நடிப்பு மட்டும் இன்றி, சிம்பு ஒரு டான்சரும் கூட, ஆட்டத்திலும் இவரை அடித்து கொள்ளமுடியாது. சமீபத்தில் இவருக்கு முட்டியில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, கடந்த சில வருடங்களாக ஹெவியான டான்ஸ் ஸ்டெப்புகளை தவிர்த்து வருகிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Simbu Debut hero in 18 years:
சிம்பு 'காதல் அழிவதில்லை' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நிலையில், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து, தம், அலை, கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து, மிக குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்கள் லிஸ்டில் இணைந்தார்.
Aishwarya Rajini, nayanthara and Hansika Ex Lover Controversy
இவர் எந்த அளவிற்கு பிரபலமோ, அதே அளவிற்கு சர்ச்சைக்கும் பஞ்சம் இல்லாதவர். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு டைமுக்கு வரமாட்டார் என்பதில் துவங்கி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நயன்தாரா, ஹன்சிகா என பல பிரபலங்களின் காதல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 40 வயதிலும் முரட்டு சிங்கிளாக இருக்கும் சிம்புவுக்கு பல வருடமாகவே தீவிர பெண் வேட்டை நடந்து வரும் நிலையில், திருமணம் குறித்த செய்து மட்டும் இன்னும் வந்தபாடில்லை.
Simbu Cinema Carrier:
அதே போல் கடந்த சில வருடங்களாக சிம்புவின் சினிமா வழக்கை டல் அடித்த நிலையில், 'மாநாடு' வெற்றி மீண்டும் சிம்புவை லைம் லைட்டுக்கு கொண்டு வந்துள்ளது. சமீபத்தில் வெளியான சிம்புவின் படங்களான, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்கள் தரமான வெற்றியை பதிவு செய்த நிலையில், தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தன்னுடைய அடுத்த படத்தை நடித்து வருகிறார்.
Simbu Salary Details
சிம்பு தன்னுடைய முதல் படத்தில், சில லட்சம் மட்டுமே சம்பளமாக பெற்ற நிலையில்... மெல்ல மெல்ல கோடிகளில் சம்பளம் பெரும் அளவுக்கு உயர்ந்தார். மாநாடு படத்தில் 10 கோடி சிம்புவுக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிக்கும் படங்களுக்கு 20 முதல் 30 கோடி வரை சம்பளத்தை உயர்த்தியுள்ள சிம்பு, 18 வயதில் இருந்தே ஹீரோவாக நடித்து வரும் நிலையில், இவர் இவரை சுமார் 120 கோடி வரை சொத்து சேர்த்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
Simbu Property:
இவருடைய சம்பாத்தியத்தை தாண்டி, சென்னையில் குரல் டிவி, பல இடங்களில் வீடுகள், 5-க்கும் மேற்பட்ட சொகுசு கார், உள்ளிட்ட பல சொத்துக்கள் இவருக்கும், இவரின் குடும்பத்திற்கும் சொந்தமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.