பாக்கிய லட்சுமி சீரியலில் கெஸ்ட் ரோலில் என்ட்ரி கொடுத்த முன்னணி தமிழ் ஹீரோ! வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கிய லட்சுமி' சீரியலில், பிரபல தமிழ் ஹீரோ ஒருவர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Vijay TV Baakiyalakshmi Serial
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில், ஒரு சில தொடர்கள் இல்லத்தரசிகள், இளம் ரசிகர்களை கடந்து பிரபலங்களாலும் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெண்கள் சாதிக்க வயது ஒரு தடையே இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் 'பாக்கியலட்சுமி'.
Top 10 TRP Serial:
பெங்காலி மொழியில் ஒளிபரப்பாகி வரும், ஸ்ரீமோகி என்ற சீரியலின் ரீமேக்காக, தமிழில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் இந்த தொடர், ஒவ்வொரு வாரமும், டாப் 10 TRP பட்டியலில் இடம்பிடித்து, மற்ற சீரியல்களுக்கு செம்ம டஃப் கொடுத்து வருகிறது.
Gopi Married to Radhika
விருப்பம் இல்லாமல் பாக்கியாவை பெற்றோர் வற்புறுத்தலால் திருமணம் செய்து கொள்ளும் கோபி, பின்னர் அவர் மூலம் 3 பிள்ளைகளையும் பெற்று கொள்கிறார். மூத்த மகனுக்கு திருமணம் ஆன பிறகு, தன்னுடைய பழைய காதலி... கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று, பிரிந்ததை அறிந்து அவரை திருமணம் செய்து கொள்ள போட்ட பிளான் எல்லாம் தனி ராகம் என்று தான் சொல்ல வேண்டும். ஒருவழியாக பாக்கியாவிடம் இருந்து பிரிந்து, ராதிகாவை திருமணம் செய்து கொண்ட கோபி, தன்னால் முடிந்த வரை பாக்கியாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார்.
Baakiyalakshmi Canteen Problem:
கோபி ஒரு பக்கம் பாக்கியாவுக்கு பிரச்சனை என்றால்... மற்றொருபுறம், ராதிகாவும் சேர்ந்து டார்ச்சர் செய்து வருகிறார். கஷ்டப்பட்டு ராதிகாவின் கம்பெனியில் கேன்டியன் ஆர்டரை பாக்கியா கைப்பற்றிய நிலையில், தற்போது ராதிகாவின் சூழ்ச்சியால் அந்த வாய்ப்பு கையை விட்டு நழுவும் நிலையில் உள்ளது. மீண்டும் பாக்கியா கேன்டியன் ஆர்டரை கைப்பற்றுவாரா? என்கிற பரபரப்பான காட்சிகளுடன் சீரியல் சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது பிரபல முன்னணி நடிகர் இந்த சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
Siddharth Acting Vijay TV Baakiyalakshmi Serial
அவர் வேறு யாரும் அல்ல, பிரபல நடிகர் சித்தார்த் தான். பாக்கியாவுக்கு ஆதரவாக மிகவும் முக்கியமான காட்சியில் சித்தார்த் நடித்துள்ளதாகவும், இவரின் காட்சிகள் இன்னும் ஓரிரு நாட்களில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவாக நடித்து வரும் சுசித்ரா சித்தார்த்துடன் எடுத்து கொண்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது.