அப்போ அது நெசந்தானா? துபாயில் தல அஜித்துடன் சஞ்சய் தத்.. இணையத்தில் போட்டோ வைரல் - விடாமுயற்சி கம்மிங் சூன்?
இந்த ஆண்டு பிரபல இயக்குனர்H. வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படத்தை தொடர்ந்து தல அஜித், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு படத்தில் நடிப்பார் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
Thala Ajith and Vignesh
முதலில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த திரைப்படத்தை இயக்குவார் என்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்திருந்த நிலையில், அதில் ஏற்பட்ட சில சிக்கல்களால் அஜித்தின் திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது.
Magizh Thirumeni
ஆனால் அந்த அறிவிப்பு வெளியான பல நாட்கள் கழித்தும், அஜித் அவர்களின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல்கள் வெளிவராமல் இருந்தது. அந்த சூழ்நிலையில் தான் மகிழ் திருமேனி அஜித்தின் அடுத்த திரைப்படத்தின் தலைப்பை வெளியிட்டார். விடாமுயற்சி என்று பெயரிடப்பட்ட அந்த படத்தின் பணிகள் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Vidamuyarchi
ஆனால் இன்றளவும் தொடர்ச்சியாக இந்த படத்தின் படபிடிப்புகள் தள்ளிக் கொண்டே போகிறது. இந்நிலையில் இந்த மாத இறுதிக்குள் விடாமுயற்சி படத்தின் படபிடிப்பு பணிகள் துவங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், இதற்கான பணிகள் துபாயில் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தது. அதேபோல இந்த படத்தில், லியோ திரைப்படத்தில் நடித்திருக்கும் பிரபல நடிகர் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
Sanjay Dutt
இந்நிலையில் துபாயில் பிரபல நடிகர் சஞ்சய் தத் மற்றும் தல அஜித் ஆகிய இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால் விடாமுயற்சி திரைப்படத்தில் சஞ்சய் தத் நடிப்பது உறுதியாகி உள்ளதாக தல அஜித் அவர்களின் ரசிகர்கள் அதை பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.