- Home
- Gallery
- Vishnu : விஷ்ணு விஷாலின் அடுத்த படம் ரெடி.. SKயின் நெருங்கிய நண்பரோடு இணைகிறார் - வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!
Vishnu : விஷ்ணு விஷாலின் அடுத்த படம் ரெடி.. SKயின் நெருங்கிய நண்பரோடு இணைகிறார் - வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!
Vishnu Vishal : தமிழ் திரையுலகில் வித்தியாசமான பல நல்ல படங்களை கொடுத்தவர் தான் விஷ்ணு விஷால். இப்பொது தனது அடுத்தப்பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Cricketer
மிகப்பெரிய கிரிக்கெட்டராக வேண்டும் என்ற ஆசையோடு பயணித்து வந்த விஷ்ணு விஷால், உடலில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மேற்கொண்டு கிரிக்கெட் பாதையில் பயணிக்க முடியாமல் போனது. அதன் பிறகு இவர் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.
vennila kabadi kuzhu
கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான "வெண்ணிலா கபடி குழு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய விஷ்ணு விஷால், தொடர்ச்சியாக "பலே பாண்டியா", "குள்ளநரி கூட்டம்", "நீர்பறவை", "முண்டாசுப்பட்டி" மற்றும் "இன்று நேற்று நாளை" போன்ற வெற்றி திரைப்படங்களை கொடுத்து வந்தார்.
Lal Salaam
இறுதியாக சூப்பர் ஸ்டாரின் "லால் சலாம்" திரைப்படத்தில் தோன்றிய விஷ்ணு விஷால், "மோகன் தாஸ்" மற்றும் "ஆரியன்" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் அவருடைய அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Arunraja
"கனா" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான அருண் ராஜா காமராஜ் இயக்கும் புதிய திரைப்படத்தில் நாயகனாக விஷ்ணு விஷால் நடிக்க உள்ளார். அந்த திரைப்படத்தை அவரே தயாரிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் விதார்த், வாணி போஜனை கைது செய்ய வேண்டும்.. அஞ்சாமை படக்குழு மீது புகார்.. என்ன ஆச்சு?