MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இனி தாமதித்தால் தப்பு? 'தளபதி 69' படம் பற்றி விஜய் எடுத்த திடீர் முடிவு.! கொண்டாட்டத்தில் கோட் தயாரிப்பாளர்!

இனி தாமதித்தால் தப்பு? 'தளபதி 69' படம் பற்றி விஜய் எடுத்த திடீர் முடிவு.! கொண்டாட்டத்தில் கோட் தயாரிப்பாளர்!

தளபதி விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள, 'தளபதி 69' படம் குறித்து அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாகவும், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. 

2 Min read
manimegalai a
Published : Jun 15 2024, 06:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தளபதி விஜய், கடந்த 5 வருடங்களாகவே தொடர்ந்து தன்னுடைய திரைப்பட விழாக்களில், தற்போதைய அரசியல் குறித்து அதிகம் விமர்சித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு அரசியலுக்கு வர உள்ளது உறுதி செய்தார். 
 

26

பின்னர் புஸ்ஸி ஆனந்த் மூலம், அதிரடியாக தேர்தல் ஆணையத்தில் தன்னுடைய கட்சியின் பெயரை தமிழக வெற்றிக் கழகம் என பதிவு செய்த நிலையில், 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை 234 தொகுதியிலும் சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

சந்தியா செய்த துரோகம்.. தெரிய வந்த உண்மையால் மாயா எடுத்த முடிவு? சந்தியா ராகம் சனி மற்றும் ஞாயிறு அப்டேட்!
 

36

தளபதி விஜய் அரசியலுக்கு வர உள்ளதாக வெளியிட்ட அறிவிப்பு, அதிமுக மற்றும் திமுக கட்சியினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் தளபதி ஒரே ஒரு ஆப் மூலம் 24 மணி நேரத்தில் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை சேர்த்தார்.
 

46

மேலும் அரசியலுக்கு வர உள்ளதால், இப்போது நடித்து வரும் 'கோட்' மற்றும் அடுத்ததாக நடிக்க உள்ள 'தளபதி 69' படமே தன்னுடைய கடைசி படம் என அறிவித்தார். விஜய் திரையுலகில் இருந்து முழுமையாக விலகுவதாக கூறியது, பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும்.. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்துடன் விஜய் இப்படி ஒரு முடிவை எடுத்ததற்கு பலரும் தங்களின் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Vadivelu: விஜயகாந்த் மீது பயம்! நம்ப வைத்து மோசம் செய்த வடிவேலு... என் மகன் வாழ்க்கையே போச்சு! கதறிய பிரபலம்!
 

56

தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, தளபதி கடைசி படமாக 'கோட்' அமையலாம் என ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.  விஜய் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதால், இப்போதே தன்னுடைய அரசியல் கள பணிகளை துவங்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்கு மேல் தாமதப்படுத்தினால் அது மிகவும் தவறாகிவிடும் என பல அறிவுறுத்தி வருவதால், தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு தளபதி 69 ஆவது படத்தை ட்ராப் பண்ண முடிவெடுத்துள்ளாராம்.
 

66

கூடிய விரைவில் இதுகுறித்த அறிவிப்பை தளபதி வெளியிட வாய்ப்புள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். ஒருவேளை தளபதி நடித்து வரும் கோட் அவரின் கடைசி படமாக இருக்கும் என்றால், கண்டிப்பாக இப்படம் இதற்க்கு முன் வெளியான பல முன்னணி நடிகர்களின் வசூலை முறியடிக்கும் படியான வசூலை வாரி குவிக்கும். எனவே இது படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஜாக்பாட்டாக அமையலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதுவரை 'தளபதி 69' படம் குறித்து எந்த தகவலையும் விஜய் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேம்ஜிக்கும் அவர் மாமியாருக்கும் ஒரே வயசு! 1000 சவரன் எல்லாம் உட்டாலக்கடியா? இந்துவின் பின்னணி இதுதான்!
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved