நடிகர் விதார்த், வாணி போஜனை கைது செய்ய வேண்டும்.. அஞ்சாமை படக்குழு மீது புகார்.. என்ன ஆச்சு?
அஞ்சாமை படத்தில் நடித்த நடிகர்கள் விதார்த், வாணி போஜன் உள்ளிட்டோர் கைது செய்ய கோரி புகார் வந்துள்ளது பெரும் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது.
நடிகர் விதார்த் நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் அஞ்சாமை. இந்த படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடித்துள்ளார். இயக்குனர் எஸ்.பி. சுப்புராமன் இயக்கியுள்ள இப்படம் ஆனது நீட் தேர்வால் நடக்கும் கொடுமைகளை எடுத்துரைக்கும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வால் பல்வேறு தற்கொலைகள் நடந்த வண்ணம் உள்ளன. இதனால் மாநில காட்சிகள் நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த நிலையில் நீட் தேர்வு அவசியமா? அதனால் ஏழை எளிய மாணவர்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்ற கருத்தை மையாக வைத்து உருவாகியுள்ளது அஞ்சாமை படம்.
பொதுமக்கள் பலரின் பாராட்டுக்கள் இப்படத்துக்கு குவிந்து வரும் நிலையில், தற்போது காவல்துறையில் அஞ்சாமை படத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் அளிக்கப்பட்டுள்ள புகாரில், நீட் தேர்வை தடுக்கும் வகையில் அஞ்சாமை படம் உருவாக்கப்பட்டு உள்ளது. இது நாடு முழுதும் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளது.
எனவே அஞ்சாமை பட தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், நடிகைகளை கைது செய்ய வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை ஆர்.டி.ஐ. செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
டாடாவின் மலிவான மின்சார ஸ்கூட்டர் வரப்போகுது.. இந்தியாவே அதிரப்போகுது.. விலை எவ்வளவு?