இந்த 3 மாவுகள் இரத்த சர்க்கரை அளவை எகிற வைக்குமாம்.. இதுல கோதுமையும் இருக்காம்!
நீரிழிவு நோயாளிகளுக்கு சில உணவுகள் தீங்கு விளைவிக்கும். கோதுமை மாவு, சோள மாவு, அரிசி மாவு போன்றவை இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும். இந்த உணவுகளை குறித்து இங்கே காண்போம்.
Diabetes
ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்தால் அவருடைய சிறுநீரகம், கல்லீரல், இதயம், கண் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படும். இதற்கு காரணம் மோசமான உணவும், வாழ்க்கை முறையே முக்கிய காரணங்களாகும். மற்றொரு காரணம் உடலுக்கு போதுமான உழைப்பு இல்லாமல் இருந்தாலோ, உடற்பயிற்சி செய்யாமல் இருந்தாலோ, ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிட்டாலோ சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் சில உணவுகளை சாப்பிட்டார் திடீரென சர்க்கரை அளவு உயர்த்தி காட்டுமாம். அந்த உணவுகளை குறித்து விவரங்களை இங்கே பார்க்கலாம்.
Wheat flour
கோதுமை மாவு
பெரும்பால சர்க்கரை நோயாளிகள் கோதுமை மாவு சப்பாத்தி, கோதுமை தோசை ஆகிய உணவுகளை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் கடையில் வாங்கும் கோதுமை மாவு வாங்கி சாப்பிட்டால் உடலுக்கு நல்லது அல்ல. ஏனெனில் கடைகளில் வாங்கும் மாவு பதப்படுத்தப்பட்டது. இதில் கோதுமை உமி அகற்றப்பட்டு தான் அரைக்கப்படும். இதனால் அதிலுள்ள நார்ச்சத்து நீங்குகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கை விளைவிக்கும். ஆகையால் கோதுமை வாங்கி நீங்களே வாங்கி அறைத்து சாப்பிட்டால் நல்லது.
Corn Flour
சோள மாவு
மக்கா சோளத்தில் அதிகளவில் புரதச்சத்து உள்ளது. ஆகையால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சோள ரொட்டியை சாப்பிடக்கூடாது. சோள ரொட்டிகளில் புரதச்சத்தை விடவும் கார்போஹைட்ரேட் அதிகமாக காணப்படுகிறது. ஆகவே சோள ரொட்டியை உண்பவர்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை உடனே அதிகரித்து காட்டும்.
RiceFlour
அரிசி மாவு
சர்க்கரை நோயாளிகளுக்கு அரிசி மாவு கூட ரொம்ப ஆபத்து தான். ஆகையால் தான் சர்க்கரை நோயாளிகள் அரிசியை அளவாக சாப்பிடுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது மற்றும் அதன் கிளைசெமிக் குறியீடும் மிக அதிகமாக உள்ளது. ஒருநாளில் ஒருமுறை அரிசி உணவை எடுத்து கொள்வது ரொம்ப நல்லது.