அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்.. எந்த துறைக்கு தெரியுமா? அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்..!
ஆவின் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
mano thangaraj
சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் 08.11.2023 மாலை 8.00 மணி அளவில் ஆவின் பணியாளர்களுக்கு ரூ.5.96 கோடி மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையை
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் வழங்கினார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பணியாளர்களுக்கு 2022-2023 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் 8.33 சதவிகிதம் மற்றும் கருணைத்தொகை 11.67 சதவிகிதம் ஆக மொத்தம் 20 சதவிகிதம் வழங்க ஆணையிட்டுள்ளார்கள்.
அதன்படி C மற்றும் D தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியளார்கள்
கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரியும் 4070 பணியாளர்களுக்கு இவ்வாண்டு தீபாவளி மிகை ஊதியம் மற்றும் கருணை தொகையை ரூ.5.96 கோடி வழங்க முடிவு செய்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில் 08.11.2023 அன்று நந்தனம் ஆவின் இல்லம் வளாகத்தில் பணியாளர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையை பால்வளத்துறை அமைச்சர் நேரடியாக வழங்கினார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதற்கான மொத்த செலவீனம் ரூ.5.96 கோடியினை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியளார்கள் கூட்டுறவு ஒன்றியங்களின் சொந்த நிதியிலிருந்து செலவிடப்படுகிறது.