MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • சாதனங்கள்
  • Heat Bag Sealer : ரூ.240 இருந்தால் போதும்! சமையலறை வேலையை ஈஸியாக்கும் மாடர்ன் கேட்ஜெட்

Heat Bag Sealer : ரூ.240 இருந்தால் போதும்! சமையலறை வேலையை ஈஸியாக்கும் மாடர்ன் கேட்ஜெட்

Heat Bag Sealer : சிப்ஸ், பிஸ்கட், ஸ்நாக்ஸ் உள்ளிட்ட திறந்த பாக்கெட்டுகளை மீண்டும் சீல் செய்ய உதவும் இந்த ஸ்மார்ட் பாக்கெட் சீலரில் கட்டிங் வசதியும் உள்ளது. இவை சமையலறையில் உணவுப் பொருட்களை ஒழுங்காக வைத்திருக்க உதவுகிறது.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 30 2026, 06:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
பாக்கெட் சீலர்
Image Credit : Pinterest

பாக்கெட் சீலர்

சிப்ஸ் பாக்கெட், பிஸ்கட் பாக்கெட், மசாலா பாக்கெட், பருப்பு, உலர் பழங்கள் என ஒருமுறை திறந்த உணவுப் பாக்கெட்டை அப்படியே விட்டால் காற்று புகுந்து சுவையும் தரமும் மாறிவிடும்.

இப்படி ஸ்நாக்ஸ் பாக்கெட்டைத் திறந்துட்டு பாதியிலேயே வச்சிட்டா நமத்துப் போகுதா? ரப்பர் பேண்ட் தேடித் தேடி அலைந்து அலுத்துப்போச்சா? இனி அந்த கவலையே வேண்டாம். உங்கள் வீட்டின் குட்டி தேவலோகக் கருவியாக வந்துவிட்டது இந்த 2 இன் 1 மினி போர்ட்டபிள் பிளாஸ்டிக் பேக் சீலர் (Portable Mini Bag Sealer & Cutter).

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
இது எதற்காக பயன்படும்?
Image Credit : Pinterest

இது எதற்காக பயன்படும்?

வீட்டில் சிப்ஸ், பிஸ்கட், நூடுல்ஸ், ஸ்நாக்ஸ், பருப்பு வகைகள், மசாலா பொருட்கள், தேநீர், காபி என பல பொருட்களின் பாக்கெட்டுகளைப் திறந்த பிறகு மீண்டும் மூடி வைக்க இனி சிரமப்பட வேண்டாம். இவை பாக்கெட்டுகளின் திறந்த பகுதியை வெப்பத்தின் மூலம் மீண்டும் ஒட்டிச் சீல் செய்கிறது.

இதன் மூலம் உணவுப் பொருட்கள் வெளிக்காற்றில் படுவதைக் குறைத்து, நமுத்துப் போவதைத் தடுக்கவும், பாக்கெட்டிற்குள் பூச்சிகள் செல்வதைத் தவிர்க்கவும் உதவும். சில சமயங்களில் திறந்த பாக்கெட்டுகளில் இருந்து பொருட்கள் கீழே கொட்டுவதையும் தடுத்து, சமையலறையை சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருக்க உதவுகிறது.

சின்ன கருவி ஆனால் சமையலறையில் தினசரி பயன்பாட்டிற்கு பெரிய உதவி. திறந்த பாக்கெட்டுகளை அப்படியே விட்டுவிடாமல், எளிதாக மீண்டும் சீல் செய்து பொருட்களை ஒழுங்காக வைத்துக்கொள்ள இந்த பாக்கெட் சீலர் பயன்படுகிறது.

37
சிறப்பம்சங்கள்
Image Credit : Pinterest

சிறப்பம்சங்கள்

ஒரே கருவியில் இரண்டு அசத்தலான வசதிகள். பாக்கெட்டை திறக்கவும், திறந்த பிறகு மீண்டும் சீல் செய்யவும் தனித்தனி கருவிகள் தேடி அலைய வேண்டாம்.

சீலிங் வசதி

பாக்கெட்டின் திறந்த பகுதியை வெப்பத்தின் மூலம் ஒட்டி மீண்டும் சீல் செய்கிறது. இதனால் கடையில் இருந்து புதிதாக வாங்கிய பாக்கெட்டை போன்று முழுமையாக ஏர்-டைட்டாக இருக்கும்.

கட்டிங் வசதி

பாக்கெட்டைத் திறக்க தனியாக கத்தரிக்கோல் அல்லது கத்தியைத் தேட வேண்டியதில்லை. இந்த கருவியிலேயே கொடுக்கப்பட்டுள்ள Cutter மூலம் பாக்கெட்டுகளை எளிதாக வெட்டி திறக்கலாம்.

திறக்கவும், சீல் செய்யவும் இனி ஒரே கருவி. சமையலறையில் தினசரி பயன்பாட்டிற்கு வசதியான சிறிய கருவியாக இது இருக்கும்.

47
சார்ஜ் வசதி
Image Credit : Pinterest

சார்ஜ் வசதி

  • மொபைல் சார்ஜர் அல்லது USB கேபிள் மூலமாகவே சுலபமாக சார்ஜ் செய்துகொள்ளலாம்.
  • கைக்கு அடக்கமாக இருப்பதால் சமையலறையில் வைப்பதற்கும், பிக்னிக் அல்லது பயணங்களின் போது பையில் எடுத்துச் செல்வதற்கும் மிகவும் வசதியாக இருக்கும்.
57
எப்படி பயன்படுத்துவது?
Image Credit : Pinterest

எப்படி பயன்படுத்துவது?

  • பாக்கெட் சீலரை தேவையான அளவு சார்ஜ் செய்து, கருவியை ஆன் செய்யவும்.
  • நீங்கள் சீல் செய்ய விரும்பும் பிளாஸ்டிக் பாக்கெட்டின் திறந்த நுனியை கருவியின் சீலிங் பகுதியில் சரியாக வைத்து, மெதுவாக ஒரு முனையிலிருந்து மறுமுனை நோக்கி நகர்த்துங்கள்.
  • வெப்பத்தின் மூலம் பாக்கெட்டின் திறந்த பகுதி ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு, மீண்டும் மூடப்பட்ட நிலையில் இருக்கும். அவ்வளவுதான் திறந்த பாக்கெட்டை சில நொடிகளில் சுலபமாக சீல் செய்து வைத்துவிடலாம்.
67
இதன் முக்கிய பயன் என்ன?
Image Credit : Pinterest

இதன் முக்கிய பயன் என்ன?

  • திறந்த பாக்கெட்டில் இருக்கும் உணவுப் பொருட்களை காற்று மற்றும் ஈரப்பதத்திலிருந்து ஓரளவு பாதுகாக்க இந்த சீலர் உதவும்
  • இதனால் பாக்கெட்டைத் திறந்த பிறகு உணவுப் பொருட்கள் விரைவாக சுவை, மணம் மற்றும் மொறுமொறுப்புத் தன்மையை இழப்பதை குறைக்கலாம்.
  • குறிப்பாக பிஸ்கட், சிப்ஸ், நட்ஸ், ஸ்நாக்ஸ் போன்றவற்றை ஒரே நாளில் முழுவதுமாக பயன்படுத்தாமல், கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுபவர்களுக்கு இந்த சிறிய கேட்ஜெட் மிகவும் வசதியாக இருக்கும்.
77
சமையலறையில் ஏன் தேவை?
Image Credit : Pinterest

சமையலறையில் ஏன் தேவை?

  • தினமும் பாக்கெட்டுகளைத் திறந்து மீண்டும் மூட வேண்டியிருந்தால், இந்தச் சிறிய சாதனம் இடத்தை அதிகம் பிடிக்காமல் பாக்கெட்டுகளை ஒழுங்காக மூடி வைக்க உதவும்.
  • மிச்சமான பலகாரங்கள், ஸ்நாக்ஸ் மற்றும் திறந்த பாக்கெட் உணவுப் பொருட்களை வீணாக்காமல் பாதுகாப்பாக வைத்திருக்க இந்த ஸ்மார்ட் பாக்கெட் சீலர் உங்கள் சமையலறையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒரு மாடர்ன் கேட்ஜெட். இவ்வளவு வசதிகள் கொண்ட இந்த ஸ்மார்ட் பாக்கெட் சீலரின் விலை வெறும் ரூ.240 மட்டுமே.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
நுட்பக் கருவி
சமையலறை குறிப்புகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Acer Aspire 3 laptop: NEET மாணவர்களுக்கு Acer-ன் ஸ்பெஷல் லேப்டாப்...என்னென்ன வசதிகள் இருக்கு?
Recommended image2
Facts : மொபைல் போன் கலர், கலரா இருந்தாலும் சார்ஜர் மட்டும் ஏன் கருப்பு, வெள்ளையா இருக்கு? அதில் இவ்ளோ விஷயம் இருக்கா?
Recommended image3
Fun Facts: டைப்-சி சார்ஜரில் உள்ள 'C'-க்கு என்ன அர்த்தம்? 90% பேருக்கு இது தெரியாது.!
Related Stories
Recommended image1
Kitchen Sink Clog: சிங்க் அடைச்சுக்கிச்சா? பிளம்பர் அழைக்கும்முன் இந்த சிம்பிள் ட்ரிக் டிரை பண்ணுங்க
Recommended image2
Kitchen Gadgets: வீட்டில் இருக்க வேண்டிய சூப்பர் கிச்சன் கேஜட்ஸ்..இனி உங்க சமையலும் செம ஈஸி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved