MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • சாதனங்கள்
  • Facts : மொபைல் போன் கலர், கலரா இருந்தாலும் சார்ஜர் மட்டும் ஏன் கருப்பு, வெள்ளையா இருக்கு? அதில் இவ்ளோ விஷயம் இருக்கா?

Facts : மொபைல் போன் கலர், கலரா இருந்தாலும் சார்ஜர் மட்டும் ஏன் கருப்பு, வெள்ளையா இருக்கு? அதில் இவ்ளோ விஷயம் இருக்கா?

Mobile Phone Charger : ஸ்மார்ட்போன்கள் விதவிதமான கலர்ல வந்தாலும், சார்ஜர் மட்டும் ஏன் கருப்பு இல்லைனா வெள்ளை நிறத்துல இருக்கு? இதுக்கு பின்னாடி டெக்னாலஜி, பாதுகாப்பு என பல காரணங்கள் இருக்கு. அது என்னன்னு பார்ப்போம்

2 Min read
Author : Ganesh A
Published : Jun 24 2026, 02:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Mobile charger color Secret
Image Credit : chatgpt

Mobile charger color Secret

இன்றைய சூழலில் மொபைல் போன் என்பது அனைவர் மத்தியிலும் ஒரு அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. போன் இல்லாதவர்களை பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது. இப்படி அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல் போன்கள் வாங்கும் போது அதனுடன் சார்ஜரும் வழங்கப்படும். அந்த சார்ஜர் பெரும்பாலும் வெள்ளை அல்லது கருப்பு நிறத்தில் தான் இருக்கும். அது ஏன் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

போன் சார்ஜ் ஆகும்போது சார்ஜர்ல சூடு ஏறும். அப்போது வெள்ளை நிற சார்ஜர்கள் சூட்டை வெளியேத்த ரொம்ப உதவியா இருக்கு. இதனால சார்ஜர் அதிகமா சூடாகுறது தவிர்க்கப்படுது, விபத்துகளும் குறையுது.

Fun Facts: டைப்-சி சார்ஜரில் உள்ள 'C'-க்கு என்ன அர்த்தம்? 90% பேருக்கு இது தெரியாது.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
செலவைக் குறைக்கும் சூட்சமம்!
Image Credit : Gemini

செலவைக் குறைக்கும் சூட்சமம்!

ஸ்மார்ட்போன் கம்பெனிகள் லட்சக்கணக்குல சார்ஜர் தயாரிப்பாங்க. கருப்பு, வெள்ளை பிளாஸ்டிக் பயன்படுத்தினா உற்பத்தி ஈஸியா முடியும். மத்த கலர் மாதிரி இதுக்கு தனியா சாயம் தேவையில்லை. மெஷின்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய வேலையும் மிச்சம். இதனால நேரமும் மிச்சம், செலவும் கம்மி. அதனை கருத்தில் கொண்டே இந்த இரு நிறங்களை பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள்.

Related Articles

Related image1
Mobile Charger: உங்க சார்ஜர் ஒரிஜினலா? டூப்ளிகேட்டா? இந்த குறியீடுகளை வச்சே கண்டுபிடிக்கலாம்!
Related image2
Smartphone Charger: 35W, 64W, 95W... உங்க போனுக்கு எந்த சார்ஜர் பெஸ்ட்? முழு விவரம்!
35
பாதுகாப்பு சோதனையும் ஈஸி!
Image Credit : Getty

பாதுகாப்பு சோதனையும் ஈஸி!

சார்ஜர்கள் மார்க்கெட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி, தீ விபத்து, ஷார்ட் சர்க்யூட் மாதிரியான கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். கருப்பு, வெள்ளை பிளாஸ்டிக் மேல தீக்காயங்கள், புகைக்கறை, உருகின பாகங்கள் எல்லாம் தெளிவா தெரியும். இதனால குறைபாடுகளை சீக்கிரம் கண்டுபிடிக்க முடியும். வாங்கும்போதே அதில் ஏதாவது குறைபாடு இருந்தால் உடனே மாற்றிக் கொள்ள உதவியாக இருக்கும்.

45
சர்டிபிகேட் வாங்க சிம்பிள் வழி!
Image Credit : Getty

சர்டிபிகேட் வாங்க சிம்பிள் வழி!

இந்த ரெண்டு நிறங்களுக்கு பயன்படுத்துற பிளாஸ்டிக் ஃபார்முலாவுக்கு பாதுகாப்பு ஏஜென்சிகள் ஏற்கனவே அனுமதி கொடுத்திருக்கு. புதுசா வேற கலர் பயன்படுத்தினா, மறுபடியும் புதுசா டெஸ்ட் பண்ணி அனுமதி வாங்கணும். இதனால உற்பத்தி லேட் ஆகும். கருப்பு, வெள்ளை நிறத்துல அந்தப் பிரச்னை இல்லை. உற்பத்தியும் சீக்கிரம் முடிவும், கம்மி செலவிலேயே சார்ஜர் தயாரிக்க முடியும்.

55
கலர் கலரா சார்ஜர் இருந்தா என்ன பிரச்சனை?
Image Credit : Asianet News

கலர் கலரா சார்ஜர் இருந்தா என்ன பிரச்சனை?

போனோட கலருக்கு மேட்சா சார்ஜர் வாங்க வேண்டிய அவசியமே இல்லை. கருப்பு, வெள்ளை சார்ஜர் எந்த போனுக்கும் பொருந்தும். ஒருவேளை சார்ஜர் ரிப்பேர் ஆனா, புதுசு வாங்குறது ரொம்ப ஈஸி. கலர் மேட்ச் ஆகுமான்னு டென்ஷன் வேண்டாம். ஆகமொத்தம், இந்த ரெண்டு நிறங்களும் ஏதோ எதேச்சையா செலக்ட் பண்ணல. சூட்டைக் கட்டுப்படுத்துறது, குறைஞ்ச செலவு, பாதுகாப்பு, வேகமான அனுமதி, வாடிக்கையாளர் வசதின்னு பல விஷயங்களை மனசுல வெச்சு எடுத்த முடிவுதான் இது. அதனாலதான் உங்க போன் எவ்வளவு கலர்ஃபுல்லா இருந்தாலும், சார்ஜர் சிம்பிளா இருக்கு.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நகர்பேசி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Fun Facts: டைப்-சி சார்ஜரில் உள்ள 'C'-க்கு என்ன அர்த்தம்? 90% பேருக்கு இது தெரியாது.!
Recommended image2
மிரள வைக்கும் OPPO Find X9s.! Dslr கேமராக்கள் இனி தேவையில்லை.! அதிநவீன AI தொழில்நுட்பம் முதல் 5 வருட பேட்டரி வரை.!
Recommended image3
Amazon: USB ஃபேன் முதல் மொபைல் ஹோல்டர் வரை.. 100 ரூபாய்க்குள் அமேசானில் கிடைக்கும் 5 கேட்ஜெட்ஸ்!
Related Stories
Recommended image1
Mobile Charger: உங்க சார்ஜர் ஒரிஜினலா? டூப்ளிகேட்டா? இந்த குறியீடுகளை வச்சே கண்டுபிடிக்கலாம்!
Recommended image2
Smartphone Charger: 35W, 64W, 95W... உங்க போனுக்கு எந்த சார்ஜர் பெஸ்ட்? முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved