MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Smartphone Charger: 35W, 64W, 95W... உங்க போனுக்கு எந்த சார்ஜர் பெஸ்ட்? முழு விவரம்!

Smartphone Charger: 35W, 64W, 95W... உங்க போனுக்கு எந்த சார்ஜர் பெஸ்ட்? முழு விவரம்!

Smartphone Charger: தவறான சார்ஜரில் சார்ஜ் போட்டால் போன் பேட்டரி வீணாகி விடும். ஆகவே 35W, 64W, 95W டைப் சார்ஜரில் எது உங்கள் போனுக்கு செட் ஆகும் என்பது குறித்து பார்ப்போம். 

2 Min read
Author : Rayar r
Published : May 28 2026, 10:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
உங்க போனுக்கு ஏற்ற சார்ஜ் எது?
Image Credit : social media

உங்க போனுக்கு ஏற்ற சார்ஜ் எது?

தவறான சார்ஜரைப் பயன்படுத்தினால், பேட்டரி சீக்கிரம் வீணாகிவிடும், போன் அதிக சூடாகும். உங்கள் போனுக்கு எந்த சார்ஜர் சிறந்தது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். தினசரி பயன்பாட்டிற்கு 35W சார்ஜர் ஒரு சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. சோஷியல் மீடியா, போன் கால்கள், வீடியோக்கள் பார்ப்பவர்களுக்கு இது பேட்டரிக்கு அதிக அழுத்தம் கொடுக்காது.

நடுத்தர மற்றும் கேமிங் ஸ்மார்ட்போன்களுக்கு 64W சார்ஜர் பொருத்தமானது. இது போனை வேகமாக சார்ஜ் செய்வதால், அதிக நேரம் பயன்படுத்துபவர்கள் அடிக்கடி சார்ஜ் செய்யத் தேவையில்லை. கேமிங், வீடியோ எடிட்டிங் போன்ற அதிக திறன் தேவைப்படும் பணிகளைச் செய்பவர்களுக்கு 95W சார்ஜர் சிறந்தது. உங்கள் போன் 35W சப்போர்ட் செய்தால், 95W சார்ஜரைப் பயன்படுத்தினாலும் தேவையான சக்தியை மட்டுமே எடுத்துக்கொள்ளும். ஆனால், லோக்கல் சார்ஜர்கள் போனை சூடாக்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
64W ஒரு நல்ல தேர்வு
Image Credit : Getty

64W ஒரு நல்ல தேர்வு

மலிவான அல்லது தரம் குறைந்த சார்ஜர்களைப் பயன்படுத்தினால் பேட்டரி ஆயுள் குறையும், போன் சூடாகும். நிறுவனத்தின் ஒரிஜினல் சார்ஜர் பேட்டரியைப் பாதுகாத்து, சரியான வேகத்தில் சார்ஜ் செய்யும். சாதாரண பயன்பாட்டிற்கு 35W சார்ஜர் போதும். அதிகப் பயன்பாடு உள்ளவர்களுக்கு 64W ஒரு நல்ல தேர்வு. மிக வேகமாக சார்ஜ் செய்ய வேண்டுமென்றால், உங்கள் போன் சப்போர்ட் செய்தால் 95W சார்ஜரைத் தேர்ந்தெடுக்கலாம்.

Related Articles

Related image1
Compact Phones: வெயிட் கம்மி! பவர் ஜாஸ்தி! இந்தியாவில் கலக்கும் பெஸ்ட் 'காம்பாக்ட்' ஸ்மார்ட்போன்கள்! முழு லிஸ்ட்!
Related image2
Mobile Lost: போன் தொலைஞ்சிருச்சா? இந்த 5 விஷயத்த 10 நிமிஷத்துல பண்ணுங்க, இல்லனா பேங்க் அக்கவுன்ட் காலி!
35
பாதுகாப்பான சார்ஜிங்கிற்கான கூடுதல் டிப்ஸ்
Image Credit : Getty

பாதுகாப்பான சார்ஜிங்கிற்கான கூடுதல் டிப்ஸ்

USB-PD (Power Delivery) தொழில்நுட்பம்: நவீன போன்கள் வேகமாக சார்ஜ் ஆக 'USB-PD' அல்லது 'PPS' (Programmable Power Supply) தொழில்நுட்பத்தை ஆதரிக்கின்றன. நீங்கள் வாங்கும் சார்ஜரில் இந்த அம்சம் இருந்தால் மட்டுமே, அது போனின் தேவைக்கேற்ப மின்சாரத்தை சீராக வழங்கும்.

45
சார்ஜிங் கேபிளின் தரம்
Image Credit : Getty

சார்ஜிங் கேபிளின் தரம்

64W அல்லது 95W போன்ற அதிவேக சார்ஜர்களைப் பயன்படுத்தும் போது, சாதாரண கேபிள்கள் செட் ஆகாது. அதிக வாட்டேஜ் தாங்கக்கூடிய (உதாரணமாக, 5A அல்லது 100W rated) தரமான Type-C கேபிள்களைப் பயன்படுத்தினால் மட்டுமே முழு வேகம் கிடைக்கும்; போனும் சூடாகாது.

சார்ஜ் செய்யும் சூழல்: மொபைலை சார்ஜ் செய்யும் போது அதன் 'பேக் கேஸ்' (Mobile Cover) ஐ கழற்றி வைப்பது நல்லது. தடிமனான கவர்கள் வெப்பத்தை வெளியேற்றாமல் தடுத்து, பேட்டரியை சீக்கிரம் வீணாக்கிவிடும். மேலும், சூரிய ஒளி நேரடியாக படும் இடங்களிலோ அல்லது படுக்கை (Bed), சோபா போன்றவற்றின் மீதோ வைத்து சார்ஜ் செய்யக்கூடாது.

55
80% விதிமுறை
Image Credit : Getty

80% விதிமுறை

பேட்டரியின் ஆயுளை பல வருடங்களுக்கு நீட்டிக்க, எப்போதும் போனை 0% வரை விடாமல், 20% வரும்போதே சார்ஜ் செய்ய வேண்டும். அதேபோல், 80% முதல் 85% வரை சார்ஜ் ஆனதும் இணைப்பைத் துண்டிப்பது பேட்டரியின் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்தது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தொழில்நுட்பம்
திறன் பேசி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Compact Phones: வெயிட் கம்மி! பவர் ஜாஸ்தி! இந்தியாவில் கலக்கும் பெஸ்ட் 'காம்பாக்ட்' ஸ்மார்ட்போன்கள்! முழு லிஸ்ட்!
Recommended image2
Blue Moon : இந்த ஆண்டில் தெரியும் ஒரே புளூ மூன்! ஆனால், பெயர் மட்டும்தான் புளூ, உண்மையான கலர் ஆரஞ்சு!
Recommended image3
New Aadhaar App: புதிய ஆதார் மொபைல் ஆப் அறிமுகம் – முக்கிய அம்சங்கள் என்னென்ன?
Related Stories
Recommended image1
Compact Phones: வெயிட் கம்மி! பவர் ஜாஸ்தி! இந்தியாவில் கலக்கும் பெஸ்ட் 'காம்பாக்ட்' ஸ்மார்ட்போன்கள்! முழு லிஸ்ட்!
Recommended image2
Mobile Lost: போன் தொலைஞ்சிருச்சா? இந்த 5 விஷயத்த 10 நிமிஷத்துல பண்ணுங்க, இல்லனா பேங்க் அக்கவுன்ட் காலி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved