MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தொலைபேசி
  • Mobile Lost: போன் தொலைஞ்சிருச்சா? இந்த 5 விஷயத்த 10 நிமிஷத்துல பண்ணுங்க, இல்லனா பேங்க் அக்கவுன்ட் காலி!

Mobile Lost: போன் தொலைஞ்சிருச்சா? இந்த 5 விஷயத்த 10 நிமிஷத்துல பண்ணுங்க, இல்லனா பேங்க் அக்கவுன்ட் காலி!

Phone theft security : மொபைல் போன் தொலைந்துவிட்டால், உங்கள் பேங்க் அக்கவுன்ட் மற்றும் UPI விவரங்களைப் பாதுகாக்க உடனடியாக என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 27 2026, 01:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Phone theft security
Image Credit : X

Phone theft security

இன்னைக்கு நம்ம எல்லாருடைய மொபைல் போனிலும் பேங்க் அக்கவுன்ட், பர்சனல் போட்டோஸ், சோஷியல் மீடியா அக்கவுன்ட்ஸ்னு பல முக்கியமான விஷயங்கள் இருக்கு. அப்படி இருக்கும்போது, போன் தொலைந்துவிட்டாலோ அல்லது திருடு போய்விட்டாலோ, நமக்கு கையும் ஓடாது காலும் ஓடாது. புது போன் வாங்கணுமேங்கிறதை விட, நம்ம பேங்க் அக்கவுன்ட், UPI அல்லது பர்சனல் டேட்டாவை யாராவது தப்பா யூஸ் பண்ணிடுவாங்களோங்கிற பயம் தான் அதிகமா இருக்கும். நிறைய பேர் பதற்றத்துல போனைத் தேடியே பல மணி நேரத்தை வீணடிச்சிடுவாங்க. ஆனா அந்த நேரத்துல நீங்க சரியான விஷயங்களைச் செய்யலைன்னா, கண்ணை மூடித் திறக்குறதுக்குள்ள உங்க பேங்க் அக்கவுன்ட்ட காலி பண்ணிட முடியும். அதனால, போன் தொலைஞ்ச உடனே நேரத்தை வீணாக்காம, இந்த 5 வேலைகளை உடனே செய்யுங்க.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
சிம் கார்டை உடனே பிளாக் பண்ணுங்க
Image Credit : Getty

சிம் கார்டை உடனே பிளாக் பண்ணுங்க

போன் காணாமப் போனதும் நீங்க செய்ய வேண்டிய முதல் வேலை, உங்க டெலிகாம் ஆப்ரேட்டருக்கு (ஜியோ, ஏர்டெல், Vi, பி.எஸ்.என்.எல்) போன் பண்ணி உங்க சிம் கார்டை உடனே பிளாக் பண்ணச் சொல்றதுதான். திருடன் உங்க போன் லாக்கை திறக்க முடியலைன்னாலும், உங்க சிம்மை எடுத்து இன்னொரு போன்ல போட்டு பயன்படுத்த முடியும். அப்படி செஞ்சா, உங்க பேங்க்ல இருந்து வர்ற OTP பயன்படுத்தி உங்க பணத்தை எல்லாம் சுலபமா எடுத்துடுவான். சிம் பிளாக் ஆயிட்டா, அவனால ஒண்ணுமே பண்ண முடியாது.

Related Articles

Related image1
Insurance: மொபைல் உடைந்தால் லட்சங்கள் செலவா? விலையுயர்ந்த எலெக்ட்ரானிக் பொருட்களை பாதுகாக்கும் ஸ்மார்ட் ட்ரிக்!
Related image2
ரூ.8,999-க்கு மிலிட்டரி கிரேட் மொபைல்.. கீழே விழுந்தாலும் பயமில்லை.. 100 நாள் வரைக்கும் சலுகை வேற இருக்கு
36
இன்டர்நெட் பேங்கிங்கை முடக்குங்க
Image Credit : stockPhoto

இன்டர்நெட் பேங்கிங்கை முடக்குங்க

சிம்மை பிளாக் பண்ணின அடுத்த நிமிஷமே, உங்க வங்கிக்கு தகவல் கொடுங்க. வங்கியோட ஹெல்ப்லைன் நம்பருக்கு கால் பண்ணி உங்க நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் ஆப் மற்றும் UPI சேவைகளை உடனடியாக முடக்கச் சொல்லலாம். இதுமட்டுமில்லாம, நீங்க கூகுள் பே, போன்பே அல்லது பேடிஎம் போன்ற ஆப்களை பயன்படுத்தினா, அதோட கஸ்டமர் சப்போர்ட்டுக்கு கால் பண்ணி உங்க வாலட் மற்றும் UPI ஐடியையும் பிளாக் பண்ணிடுங்க. இதனால, திருடன் நினைச்சாலும் உங்க அக்கவுன்ட்ல இருந்து ஒரு ரூபாய் கூட எடுக்க முடியாது.

46
போனை பிளாக்லிஸ்ட் பண்ணுங்க
Image Credit : Getty

போனை பிளாக்லிஸ்ட் பண்ணுங்க

இந்திய அரசாங்கம் CEIR (Central Equipment Identity Register) அப்படீன்னு ஒரு சூப்பரான போர்ட்டலை வெச்சிருக்காங்க. இந்த அரசு இணையதளத்துக்குப் போய், நீங்க தொலைச்ச உங்க போனை பிளாக்லிஸ்ட்ல சேர்க்கலாம். இதுக்கு அந்த வெப்சைட்ல உங்க போனோட IMEI நம்பரை கொடுத்து பிளாக் பண்ணனும். இப்படி செஞ்சிட்டா, அந்த போன்ல வேற எந்த சிம் கார்டையும் போட்டு பயன்படுத்த முடியாது. அந்த போன் ஒரு உபயோகமும் இல்லாத டப்பா மாதிரி ஆகிடும். இதுல இன்னொரு நல்ல விஷயம் என்னன்னா, திருடன் அந்த போனை ஆன் செஞ்சா, போலீசுக்கு உடனே அதோட லொகேஷன் தெரிஞ்சிடும்.

56
டேட்டாவை அழிச்சிடுங்க
Image Credit : Asianet News

டேட்டாவை அழிச்சிடுங்க

உங்ககிட்ட வேற போன் அல்லது லேப்டாப் இருந்தா, உடனே உங்க கூகுள் அக்கவுன்ட் ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு) அல்லது ஐகிளவுட் அக்கவுன்ட்ல (ஐபோன் யூசர்களுக்கு) லாகின் பண்ணுங்க. அங்க 'Find My Device' அல்லது 'Find My' ன்னு ஒரு ஆப்ஷன் இருக்கும். அதைப் பயன்படுத்தி, தொலைஞ்சு போன உங்க போன்ல இருக்குற எல்லா பர்சனல் டேட்டா, போட்டோஸ் மற்றும் பாஸ்வேர்டுகளை இருந்த இடத்துல இருந்தே மொத்தமா அழிச்சிடலாம். இதனால உங்க டேட்டா தப்பானவங்க கைக்குப் போகாம தடுக்கலாம்.

66
போலீசில் புகார் கொடுங்க
Image Credit : Getty

போலீசில் புகார் கொடுங்க

கடைசியா, ஆனா ரொம்ப முக்கியமான வேலை, போலீஸ்ல புகார் கொடுக்கிறது. இப்போலாம் இதுக்காக ஸ்டேஷனுக்கு அலைய வேண்டியதில்லை, ஆன்லைன்லயே 'Lost Property' புகாரை பதிவு செய்யலாம். இந்த புகாரோட நகலை (FIR/NC) பத்திரமா வெச்சுக்கோங்க. ஒருவேளை எதிர்காலத்துல உங்க போனைப் பயன்படுத்தி யாராவது தப்பான அல்லது சட்டவிரோதமான வேலையை செஞ்சா, இந்த போலீஸ் ரிப்போர்ட் தான் உங்களை சட்ட சிக்கல்ல இருந்து காப்பாத்தும். அதுமட்டுமில்லாம, புது சிம் கார்டு வாங்கவும் இந்த ரிப்போர்ட் தேவைப்படும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நகர்பேசி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Foldable iPhone : முதல் மடிக்கும் 'ஐபோன் டியோ'! 3 லட்ச ரூபாய் விலையா? அப்படி என்ன ஸ்பெஷல்?
Recommended image2
Airtel Call History: லைஃப் பார்ட்னர் Call Historyயை Delete பண்றாங்களா? உண்மையை தெரிஞ்சுக்க ஈஸி வழி!
Recommended image3
Instagram Photo Trend: ChatGPT 80ஸ் போட்டோ டிரெண்ட்! நீங்களும் உருவாக்குவது எப்படி?
Related Stories
Recommended image1
Insurance: மொபைல் உடைந்தால் லட்சங்கள் செலவா? விலையுயர்ந்த எலெக்ட்ரானிக் பொருட்களை பாதுகாக்கும் ஸ்மார்ட் ட்ரிக்!
Recommended image2
ரூ.8,999-க்கு மிலிட்டரி கிரேட் மொபைல்.. கீழே விழுந்தாலும் பயமில்லை.. 100 நாள் வரைக்கும் சலுகை வேற இருக்கு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved