MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • ரூ.8,999-க்கு மிலிட்டரி கிரேட் மொபைல்.. கீழே விழுந்தாலும் பயமில்லை.. 100 நாள் வரைக்கும் சலுகை வேற இருக்கு

ரூ.8,999-க்கு மிலிட்டரி கிரேட் மொபைல்.. கீழே விழுந்தாலும் பயமில்லை.. 100 நாள் வரைக்கும் சலுகை வேற இருக்கு

ஐடெல் நிறுவனம், கடினமான பயன்பாட்டிற்காக MIL-STD-810H ராணுவ தர சான்றிதழுடன் ஏ100 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.8,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் 5000mAh பேட்டரி, 100 நாட்களுக்குள் இலவச ஸ்க்ரீன் ரீப்பிளேஸ்மென்ட் சலுகையுடன் வருகிறது.

1 Min read
Author : Raghupati R
Published : May 20 2026, 04:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஐடெல் ஏ100 ப்ரோ மொபைல்
Image Credit : itel

ஐடெல் ஏ100 ப்ரோ மொபைல்

இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போன் சந்தை நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து வரும் நிலையில், ஐடெல் நிறுவனம் தற்போது “கடினமாக பயன்படுத்தும் பயனர்களை” குறிவைத்து புதிய ஏ100 ப்ரோ (A100 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் ரூ.8,999 விலையில் வந்துள்ள இந்த போன், சாதாரண பட்ஜெட் போன் அல்ல என்பதையே அதன் வடிவமைப்பு முதல் சலுகை வரை காட்டுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
ஐடெல் ஏ100 ப்ரோ சிறப்புகள்
Image Credit : itel

ஐடெல் ஏ100 ப்ரோ சிறப்புகள்

ஐடெல் A100 Pro-வின் மிகப்பெரிய சிறப்பம்சமாக அதன் முரட்டுத்தனமான டிசைன் உள்ளது. இந்த போனுக்கு MIL-STD-810H ராணுவ தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தினசரி சிறிய அடிகள், கீழே விழுதல் போன்றவற்றை சாதாரண போன்களை விட நன்றாக கையாளும் வகையில் இது உள்ளது. குறிப்பாக கோமெட் ஆரஞ்ச் கலர் வேரியண்ட் தற்போது சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்படுகிறது.

Related Articles

Related image1
Free Aadhaar Update : ரூ.75 செலவில்லாமல் ஆதாரை அப்டேட் செய்யலாம்.. மக்களுக்கு வந்த பெரிய குட் நியூஸ்
Related image2
Vastu Plant for Wealth : சனிதோஷம் நீங்கி லட்சுமி கடாட்சம் கிடைக்கும் செடி.. உங்கள் வீட்டில் இருக்கா?
35
100 நாட்களுக்குள் டிஸ்பிளே சேதம்
Image Credit : itel

100 நாட்களுக்குள் டிஸ்பிளே சேதம்

இதோடு, வாங்கிய 100 நாட்களுக்குள் டிஸ்பிளே சேதம் ஏற்பட்டால் இலவச ஸ்க்ரீன் ரீப்பிளேஸ்மென்ட் வழங்கப்படும் என்ற சலுகை கூட பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பட்ஜெட்டில் இப்படி ஒரு சலுகை வழங்கப்படுவது அரிது என்பதால், இந்த போன் முதல் முறையாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

45
ஐடெல் ஏ100 ப்ரோ டிஸ்பிளே
Image Credit : itel

ஐடெல் ஏ100 ப்ரோ டிஸ்பிளே

டிஸ்பிளே பொறுத்தவரை, இதில் 6.6 இன்ச் HD+ IPS LCD பேனல் மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதம் இடம்பெற்றுள்ளது. வாட்ஸ்அப் சாட்டிங், யூடியூப் வீடியோக்கள் மற்றும் லைட் கேமிங் போன்ற அடிப்படை பயன்பாடுகளுக்கு ஏற்ற யுனிசாக் செயலி இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 3ஜிபி ரேம் + ரேம் பூஸ்ட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. Android 15 Go Edition இதில் இயங்குகிறது.

55
ஐடெல் ஏ100 ப்ரோ பேட்டரி
Image Credit : itel

ஐடெல் ஏ100 ப்ரோ பேட்டரி

5000mAh பேட்டரி, DTS ஸ்பீக்கர், 3.5mm ஹெட்போன் ஜாக் மற்றும் 10W சார்ஜிங் ஆதரவு போன்ற அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. “குறைந்த விலைக்கு நல்ல ஆயுள் மற்றும் தினசரி பயன்பாட்டு செயல்திறன் வேண்டும்” என்று தேடும் பயனர்களுக்கு ஐடெல் A100 Pro தற்போது புதிய தேர்வாக மாறியுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நகர்பேசி
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Recharge Plan Under Rs 200: ரூ.200-க்குள் பெஸ்ட் ரீசார்ஜ் எது? ஜியோ vs ஏர்டெல் - எந்த பிளான் சிறந்தது தெரியுமா?
Recommended image2
WhatsApp Call Recording: வாட்ஸ்அப் கால்களை ரெக்கார்டு செய்யலாமா? பலருக்கும் தெரியாத ரகசியம்!
Recommended image3
ரிமோட் கண்ட்ரோல் ஜீப் காருக்கு 74% தள்ளுபடி.. குட்டீஸ்களுக்கு செம சர்ப்ரைஸ்.. உடனே ஆர்டர் போடுங்க
Related Stories
Recommended image1
Free Aadhaar Update : ரூ.75 செலவில்லாமல் ஆதாரை அப்டேட் செய்யலாம்.. மக்களுக்கு வந்த பெரிய குட் நியூஸ்
Recommended image2
Vastu Plant for Wealth : சனிதோஷம் நீங்கி லட்சுமி கடாட்சம் கிடைக்கும் செடி.. உங்கள் வீட்டில் இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved